டயகம பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு!!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து 12.07.2018 அன்று மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு வன ஜீவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறியொன்று பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து – இருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதி!!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பசுமலை பகுதியில் 12.07.2018 அன்று மாலை 3.00 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்குள்ளாகி அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் போடைஸ் பிரதான வீதியை அகலப்படுத்தும் பணி நோர்வூட் பிரதேச சபை முன்னெடுத்துள்ளது!!
அண்மையில் அட்டன் போடைஸ் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கண்டி, பல்லேகல விவேகானந்தா த.வித்தியாலத்திற்கான பேன்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக கண்டி, பல்லேகல விவேகானந்தா தமிழ் வித்தியாலத்திற்கான பௌதிக வளங்களை (பேன்ட் வாத்திய கருவிகள்) வழங்கி வைக்கும் நிகழ்வு 11.07.2018 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.