முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 13, 2018

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்ட 10பேர்!!

பதுளை – ஹல்துமுல்ல, வங்கெடிகல மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டிருந்த 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

லெய்னோன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 25 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும்!!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் வெவர்லி மற்றும் போடைஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 130 வீடுகள் மற்றும் லொய்னோன் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் லெய்னோன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 25 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் வைபவங்கள் 15-03-2018 அன்று மு.ப 10.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.

வடகொழும்பில் பர்குசன் வீதி ஓரமாக ஓடும் கால்வாய் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்ட மனோ கணேசன்

வடகொழும்பில் பர்குசன் வீதி ஓரமாக ஓடும் கால்வாய் தூர்வாரி சுத்தப்படுத்தாமல் நீண்ட காலமாக இருந்த காரணத்தால் அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் அடிக்கடி சிறுமழைக்கும் வெள்ளபெருக்கில் சிக்கி தம் உடைமைகளை இழந்து, தொற்று நோய்களுக்கு உள்ளாகி பெரும் துன்பங்களை சந்தித்து வந்தார்கள்.

குழுத்தலைவர் தெரிவில் தனிச்சையாக முடிவெடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி விலகும் -சிவனேசன் தெரிவிப்பு

குழுத்தலைவர் தெரிவில் எடுத்திருக்கும் தன்னிச்சையான முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது முறையற்ற வகையில் இடம்பெற்ற குழுத்தலைவர் தெரிவை மீள் பரிசீலனையை செய்யாதுவிடத்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் விலக போவதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருமாகிய பா.சிவனேசன் தெரிவித்தார்

நோர்வூட் பிரதேசசபைக்கு 87மில்லியன் நிதி ஒதுக்கீடு – நோர்வூட்பிரதேசசபையின தவிசாளர் கணபதி ரவிகுழந்தைவேல் சபையில் அறிவிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகள் அதிகரிக்கபட்டதில் நோர்வூட் பிரதேசசபைக்கு மாத்திரம் 87மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டுள்ளதாக நகரசபைகள் மற்றும் உள்ளூராட்ச்சி சபைகள் அமைச்சர் பைதர் முஸ்தப்பாவினால் வழங்கபட்டுள்ளதாக 13.07.2018.வெள்ளிகிழமை இடம் பெற்ற அமர்வின் போது நோர்வூட் பிரதேசசபையின தவிசாளர் இதனை தெரிவித்தார் .

சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – ஒருவர் கைது!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் வைத்து சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்புகளும், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

700 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது!!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் 13.07.2018 அன்று அதிகாலை அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!