கலைஞரின் மறைவுக்கு தொழிற்சங்கவாதி சிங்.பொன்னையா இரங்கல்!!
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் தமிர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவருமான தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சிங்.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பெரும் பாராட்டிற்குறிய செயற்பாடாகும் – வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!
இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய 95 மில்லியன் ரூபாவை கல்வி இராஜாங்க அமைச்சின் ஒத்துழைப்பு காரணமாகவே இன்று அது சாத்தியமாகியுள்ளது. அதற்கு காரணம் எங்களுடைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எங்களுடைய அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஏனெனில் இதற்கான வட் வரியை செலுத்த முன்வந்தது கல்வி அமைச்சு என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
புஸ்ஸல்லவ சரஸ்வதி பாடசாலை அடிக்கல் நாட்டு விழா!!
இந்திய அரசாங்கத்தின் 950 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் புஸ்ஸல்லாவ சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 10.8.2018 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அதிமேதகு ரன்ஜித் சிங் சந்து , இராஜாங்க கல்வி அமைச்சர் வே. ராதாகிருஸ்ணன், இந்திய கண்டி உதவித் தூதுவர் பிரேந்திர சிங் ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் மண்சரிவு!!
மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்