முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 13, 2018

லொறியின் சில்லில் சிக்கி உதவியாளர் பலி; வட்டவளையில் பரிதாபம்!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கெரோலினா பகுதியில் 13.09.2018 அன்று அதிகாலை 3.30 மணியளவில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த தர்மலிங்கம் முரளிதரன் வயது 47 என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த உதவியாளர்; லொறியிலிருந்து வீழ்ந்து பின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின்...
Read More

வட்டவளை தனியார் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிவைத்துவிட்டு கொள்ளையர் கைவரிசை!

வட்டவளை மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனுவை ஆகியோரின் கை கால் கட்டபட்டநிலையில் இனந்தெரியாத குழுவினர் ஒன்று குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்து விடுதியில் இருந்த தங்கஆபரனங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 13.09.2018.வியாழகிழமை விடியற்காலை 01மணியில் இருந்து 2மணிக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளரும்...
Read More

அட்டனில் டி 56 ரக துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

அட்டன் – டன்பார் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள பூஞ்செடிகள் வளர்க்கும் தோட்டமொன்றில் இருந்து இவை 13.09.2018 அன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொது மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரமொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். க.கிஷாந்தன்)
error: Content is protected !!