முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 26, 2018

சம்பள உயர்வு கோரி மலையக இந்து குருமார் ஒன்றியம் அட்டனில் பேரணி!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் அகில இலங்கை இந்து மகா சபை ஊடாக அமைதியான பேரணி ஒன்று 26.11.2018 அன்று அட்டனில் இடம்பெற்றது.

புஸ்ஸல்லாவையில் மனித சங்கிலி போராட்டம்!!

இன்று (26.11.2018) மலையகம் முழுவதுமாக முன்னெடுக்கபட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வழங்ககோரிய போராட்டங்களில் புஸ்ஸல்லாவையில் மனித சங்கிலி போராட்டம் ஒன்று நடைபெற்றது.

தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்..

தலவாக்கலை நகரை அண்மித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தலவாக்கலை நகர வர்த்தகர்கள்,மற்றும் இளைஞர்கள் 26.11.2018 திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்து அச்சுருத்தியமைக்கு தொ.தே.சங்கத்தின் ஆதரவாளர் மீது முறைபாடு!!

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளரின் சேவைக்கு இடையூருவிளைவித்து அச்சுருத்தியமைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் மீது முறைபாடு

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மலையகமெங்கும் மனித சங்கிலி போராட்டம்!!

மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, மனித சங்கிலி போராட்டத்தில் 26.11.2018 அன்று ஈடுப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய்க்கு கம்பனிகாரர்களுடன் பேச்சுக்கு இனி இடமில்லை – அடுத்த வரும் பேச்சுவார்த்தை பிரதமரின் முன்னிலையில் கம்பனி உரிமையாளர்களுடன் – அதே நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கு வழங்கும் ஆதரவில் இருந்து விலகவும் தயார். – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

மலையகமெங்கும் இடம்பெற்ற சம்பள உயர்வு போராட்டங்களின் அழுத்தம் காரணமாக நிதி அமைச்சின் செயலாளர் எனக்கு தொடர்பு கொண்டு 26.11.2018 அன்றைய போராட்டத்தை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், தொடர்ந்து பெருந்தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுடன் (CEO) பேச்சிவார்தையில் ஈடுப்பட்டு பயனில்லை, எனவே எதிர்வரும் புதன்கிழமை பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்களை அழைத்து பிரதமரின் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்ய பிரதமர் பணிந்துள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர், தனக்கு தொலைபேசியூடாக தெரிவித்ததாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு...
Read More

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி பொகவந்தலாவையிலும் ஆர்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி பொகவந்தலாவையிலும் ஆர்பாட்டம்

பாமஸ்டன் சந்தியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரிய, சமர்சட், பாமஸ்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 26.11.2018 திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சபாநாயகர் கருஜெயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டு ஆர்ப்பாட்ட பேரணி!!

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்துலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொளாளும் நடவடிக்கைகள் வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் 25.11.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு!!

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சிறுத்தையின் சடலம் 26.11.2018. திங்கள் கிழமை விடியற்காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!