முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 28, 2018

பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை அல்லது வவுச்சரை வழங்க வேண்டும் -CSTU!!

2018 வருடத்தின் பாடசாலை நடத்துதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதால் இது நாள்வரையில் பாடசாலை சீருடைகளோ அல்லது வவுச்சரையோ பெற்றுக் கொடுக்காததையிட்டு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது வண்மையான கண்டத்தை தெரிவித்துள்ளது.

கெர்க்கஸ்வோல்ட் இல.02தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழா மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது!!

அட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல.02தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழா மற்றும் புலமை பரிசில் பரீட்சையிக்கு தோற்றிய மாணவர்களுக்கும் க.பொ.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 28.11.2018.புதன் கிழமை வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அருளாநந்தம் தலைமையில் இடம் பெற்றது.

நுவரெலியா – தலவாக்கலை வீதி மூடல் – மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!!

தலவாக்கலையிலிருந்து சமர்செட் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் 100 வருடங்களுக்கு மேல் பலம்வாய்ந்த இரும்பு பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பரீட்சார்த்திகளுக்கான சின்னதா ஒரு டிப்ஸ்….

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வாழ்வின் மிக முக்கியமானதொன்றாகும். பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்டையில் எதிர்கால கற்றல் துறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. பெறுபேறுகள் கற்றல் துறைகளைத் தீர்மானிக்கின்றனவே தவிர வாழ்க்கையை அல்ல. எனவே, முடிந்தவரை முயற்சி செய்து பரீட்சையில் உயரந்த அடைவைக் காண்பது முக்கியமானது.

இலவச அன்புலன்ஸ் வண்டி தலவாக்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது- 24 மணித்தியாலமும் இதன் சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்

இந்திய அரசாங்கத்தின் சுவசெரிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு இலவசமாக அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ கிளார்னி தோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!!

பல தேர்தல் காலங்களில் பொகவந்தலாவ கிளார்னி தோட்ட பாதையை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி வழங்கப்பட்டும் அது வாய்வார்த்தையாகவே காணப்பட்டது. ஆனால் இன்று அப்பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலுவினால் மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இ.தொ.கா இடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் நேற்று மாலை 6 மணியளவில் பிரதமர் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல அவர்களை சந்தித்து தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகன் கைது- காசல்ரீ ஜனபதய பகுதியில் சம்பவம்

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் 28.11.2018 அன்று அதிகாலை 1.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
error: Content is protected !!