முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 26, 2018

காசல்ரீ பகுதி விடுதியில் பிரித்தானிய பெண் மீது வல்லுறவு முயற்சி; இருவர் கைது!

அட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் 26.12.2018 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதுடைய குறித்த யுவதி மற்றும் அவரின் காதலன் தங்கியிருந்த அறைக்கு அருகில் சந்தேகநபர்களான இருவரும் தங்கியிருந்துள்ளனர். பின்னர் குறித்த இருவரும் 25.12.2018 அன்று மதுபானம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை பிரித்தானிய ஜோடி தங்கியிருந்த அறைக்கு வந்த சந்தேகநபர்கள் அறையில் இருந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து,...
Read More

1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை- திகாம்பரம் திட்டவட்ட அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை. அது வெறும் ஏமாற்று வார்த்தையே என மலைநாட்டு புதிய கிரமாங்கள் அடிப்படை வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் அட்டன் பொலிஸாரால் கைது!!

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7 இளைஞர்கள் 25.12.2018 அன்று அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த 7 பேரும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சராக பொறுப்பேற்ற பழனி திகாம்பரம்!!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் கடந்த வாரம் நியமிக்கப்பட்டதன் பின் இன்று அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பஸ் கட்டணங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் 4 வீதத்தினால் குறைப்பு- முழுவிபரம் உள்ளே

பஸ் கட்டணங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் 4 வீதத்தினால் குறைவடையவுள்ளது. எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணமான 12 ரூபா கட்டணம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண குறைப்பு தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம்.

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2018 அன்றுடன் 14 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
error: Content is protected !!