முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 31, 2018

சிங்.பொன்னையாவின் புதுவருட வாழ்த்து செய்தி!!

இருண்ட யுகம் நோக்கி நகர்ந்த நாட்டின் ஆட்சிக்கட்டமைப்பை நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு வழிவகுத்து கடந்து சென்ற வருடத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் பல மாற்றங்களை முன்னோக்கி நகர்த்த நாட்டு மக்கள் அனைவரும் புதிய ஆண்டில் திடசங்கட்பம் கொள்ள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியுமான சிங்.பொன்னையா தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய மாகாண அமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி!!

பிறக்கும் புத்தாண்டு இலங்கை மக்களுக்கு சம உரிமையையும் சம அந்தஸ்தையும் வழங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை சூழலை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண விவசாய இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் விடுத்துள்ள புது வருட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீ அபாயத்துக்கு உள்ளான போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு விரைவில் தனிவீடுகள் நன்கொடையாக வழங்கப்படும்!!

கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவு, தீயபாய ஆபத்துக்களில் பாதிப்புற்ற மக்களுக்கு தனிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டதுபோல போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களுக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

புரட்டொப்ட் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் இ.தொ.காவினால் வழங்கிவைக்கப்பட்டது!!

புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முன்னால் மத்திய மாகாண அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புரட்டொப்ட் தோட்ட ஆலயத்திற்கான ஒலிப்பெருக்கி மற்றும் புரட்டொப்ட் பகுதியில் உள்ள பல தோட்டங்களை சேர்ந்த விவசாயிகளை விவசாயத்துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்கிய திகாம்பரம்….

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிப்புகுள்ளாகிய மலையாழபுர மக்களுக்கான 20 லட்ச ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை கையளித்தார். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். அருமநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன,;...
Read More

மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு மண் அள்ளுண்டு செல்லபடுவதாக பிரதேசவாசிகள் குற்றச்சாற்று

நோர்வூட் போற்றிதோட்ட பகுதியில் காசல் நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கேசல் கமுவ ஒயாவிற்க்கு அருகாமையில் பாரிய அளவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வுகளில் வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாக பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

தன் உயர்தர பெறுபேற்றால் முழு மலையகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார் இரவிச்சந்திரன் ஸ்ரீதேவி!!

உயர்தர பரீட்சை வெளியாகி இருக்கும் இந்நிலையில் கேம்பிரிஜ் பாடசாலையின் ரவிச்சந்திரன் ஸ்ரீதேவி வரலாற்று சாதனையாக கலைப்பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் வாழும் பிரதேசத்திற்கும் பெருமைத்தேடி தந்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் இருவருக்குமான இழுபறி நிலை தொடருமனால் அரசாங்காத்தை கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையே காணப்படும்- இராதகிருஸ்னண் சாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில்விக்ரசிங்க இருவருக்குமான இழுபறி நிலை தொடருமனால் அரசாங்காத்தை கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையே காணப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னால் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவிப்பு
error: Content is protected !!