முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 5, 2019

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- நிதி அமைச்சர் தெரிவிப்பு!!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தேயிலை சபையுடன் கலந்துரையாடி துரித தீர்வை பெற்றுத் தர நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிளரண்ட் மற்றும் டெஸ்போர்ட் மேல்ப்பிரிவில் வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது!!

  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைவாக, விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தலா 1,000,000/- ரூபாய் ,1,000,000 ரூபாய் நிதி ஒதுக்கீடுகளில் நுவரெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கிளரண்ட் பிரிவு வீடமைப்பு திட்டத்துக்கான பாதையும் , டெஸ்போர்ட் மேல்பிரிவு நானுஓயா தோட்டத்துக்கான பாதையும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள்யின்றி இயங்கிவரும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் உள்ள முன்பாடசாலை வெகுவிரையில் புதிய காணியில் புத்துயிர் பெரும்!!

அடிப்படை வசதிகள்யின்றி இயங்கிவரும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் உள்ள முன்பாடசாலை வெகுவிரையில் புதிய காணியில் புத்துயிர் பெரும்

உள்ளூர் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்….

  எந்தவொரு போட்டி என்றாலும் வெளிப்பிரதேச வீரர்களையோ அல்லது பெரிய பெரிய வீரர்களை ரசிக்கும் நாம் எம் உள்ளூர் கழக வீரர்களை மறந்து விடுகின்றோம்.அவர்களின் திறமையும் மறைக்கப்பட்டு விடுகின்றன.இந்நிலையில் உள்ளூர் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாகவும் உள்ளூர் விளையாட்டு வீரர்களை இணகண்டுக்கொள்ளும் முகமாகவும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலையகத்தில் மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன!!

ஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன.

சீன் தோட்டத்தில் அம்மன் சிலை சில காடையர்களால் உடைக்கப்பட்டுள்ளது….

  திருக்கேதீச்சரச்சரத்தில் பதாதைகளை வைக்க வேண்டாம் என ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்துக்கள் அனைவரும் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் காணப்படுகின்றனர்.காரணம் ஏற்கனவே சிவனொலிபாதமலையும் கதிர்காமமும் கேள்விக்குறியாகிய நிலையில் மற்றொரு புது பிரச்சனை கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நடந்தேறியுள்ளது.
error: Content is protected !!