முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 14, 2019

உடரதல்ல தோட்டத்திற்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் கையளிக்கப்பட்டது…

  இளைஞர்களின் வொலிபோல் திறனை வெளிக்கொணரும் நோக்கில் உடரதல்ல பகுதிக்கு வொலிபோல் விளையாட்டு மைதானம் நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜ் மூலம் கையளிக்கப்பட்டது.தம் இளைஞர்கள் வொலிபோல் விளையாட வேண்டும்,வெளிப்பிரதேசங்களில் தடம் பதிக்க வேண்டுமென்றால் பயிற்சி பெற மைதானம் தேவை எனவே உட்ரதல்ல பிரதேச மக்கள்  இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் செவிகளுக்கு கொண்டுசெல்ல அவரின் ஊடாக விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1300,000 ரூபாய் நிதியொதுக்கீட்டில் உடரதல்ல பகுதிக்கு வொலிபோல் மைதானம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

மலையக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் திலராஜ். வடிவேல் சுரேஸ் புகழாரம்….

  மலையக மக்கள் மீது திலகராஜ் அதிக கரிசனையும் அக்கரையும் கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் களுத்துறை மாவட்ட ப்ரடெஸ்டர் தோட்டத்தில் 18 வீடுகள் கொண்ட கிராமம் கையளிக்கப்பட்டது.

மலையகப் பகுதியில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றினை உருவாக்க தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைப்பு!!

ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழ வைப்பதற்காக தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைத்து இரசாயன கலவை அற்ற மரக்கறிகளையும் உணவுகளையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை தோட்ட நிர்வாகம் சேவ் த சில்ரன் நிறுவனத்துடன் இணைந்து தோட்டப்பகுதியில் முன்னெடுத்து வருகிறது.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது….

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு

  களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டபகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களில் ஒன்றான மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நகிழ்வு 13.03.2019.புதன் கிழமை டிக்கோயா மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது
error: Content is protected !!