முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 24, 2019

150 வருட தேயிலை உற்பத்தியில் 2018ல் அரசின் முழு வருமானத்தின் 13.5 விதம் இதன் பங்காளிகளாக தொழிலாளர்கள் விளங்கினர் – நிதி அமைச்சர் மங்கள சமரவீர பெருமிதம்!!

தேயிலை தொழில் துறையில் நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுத்த மக்களாக திகழும் தோட்ட தொழிலாளர்கள் இலங்கை தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு 150வது வருடத்தையும் கடந்துள்ளனர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவிப்பு!!

மலையக மக்களுடைய முகங்களில் புன்னகையை கொண்டு வர முடியுமானால் உங்களோடு உங்கள் பயணத்தில் பங்கு கொள்ள முடியும் என்றால் உங்களுடைய சில கனவுகளை நாங்கள் நனவாக்க முடியும் என்றால் எங்களுடைய முயற்சியில் நாங்கள் வெற்றிப்பெற்று கொள்கின்றோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

கொத்மலை எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பின் போது இராதகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்….

நியூசிலாந்து நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் துக்ககரமான சம்பவம் தொடர்பாக அந்த நாட்டினுடைய ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டன.அதனை நமது நாட்டு ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என நான் கருதுகின்றேன்.

நான் தான் அமைச்சர் என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது – 600 வீடுகள் கிடைத்திருப்பதாக தம்பட்டம் அது அப்பட்டமான பொய் என்கிறார் திகாம்பரம்

பாராளுமன்றத்தில் கறுப்பாகவும், கண்ணு சிவந்த நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று 600 வீடுகளுக்கு கடன் விண்ணப்பங்களை கேட்டுள்ளார் என தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் இவ்வாறான விண்ணப்பங்கள் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராதாகிருஷ்ணன், திலகராஜ் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மின்வெட்டுக்கான நேர அட்டவணை வெளியீடு…

நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக நாளாந்தம் காலை அல்லது மாலையில் மின்சார தடை ஏற்படலாமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு…

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய “பகத் சிங் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 24.03.2019 அன்று இடம்பெற்றது.

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் தொடரும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு- 6 பேர் கைது

காசல் ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!