முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 10, 2019

கோயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி இரண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளது. கெலிவத்தையில் சம்பவம்!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் அம்மன் ஆலயத்தை உடைத்து இரு அம்மன் சிலைகளில் காணப்பட்ட தாலிகள் கலவாடப்பட்டுள்ளது.

தோட்ட துரையின் அடாவடி தனத்தால் தோட்ட தொழிலாளர்கள் 3 நாட்கள் தொடர் பணி பகிஸ்கரிப்பு!!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொங்காலை தோட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் பணி பகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கொலப்பத்தனை தோட்டத்தின் தலைவரை தோட்ட துரை அடிக்க முற்பட்டமையினாலே இவ்வாறு பணிபகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொத்மலையில் இளைஞன் ஒருவர் ஆற்றுப்பகுதியில் தவறி விழுந்து உயிரிழப்பு!!

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் 10.09.2019 அன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு நாட்கள் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு இராவணாகொடவில் சம்பவம்!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட இராவணாகொட விஜயபாகு கந்த பகுதியில் வீட்டிலிருந்து சடலமாக இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் நிரம்பி இருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்!!

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 10.09.2019 அன்று முன்னெடுக்கப்பட்டது.

திகாம்பரம் பாடசாலைகளுக்குச் செல்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – வசூல் ராஜாக்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளேன்!!

நான் பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த போடைஸ் த.ம.வி., கில்லார்னி த,ம.வி. கவரவில த.ம.வி., பொஸ்கோ கல்லூரி ஆகியவற்றுக்கு கோடிக் கணக்கான நிதியை ஒதுக்கிக் கொடுத்திருந்தேன். ஆனால், மாகாண அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டார்கள். அதிபர் ஆசிரியர்களை பயமுறுத்திய காரணத்தால் அவர்களும் பயந்து விட்டார்கள். திகாம்பரம் பாடசாலைகளுக்குச் செல்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு...
Read More

ஐ.தே.கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும்- பழனி திகாம்பரம் தெரிவிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் தமிழ்க் கல்வித்துறையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது!!

“பாராளுமன்றத் தேர்தலின்போது கல்விதுறைசார் விடயங்கள் தொடர்பிலேயே கூடுதலான உறுதிமொழிகளை வழங்கியிருந்தேன். அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.எனவே, கடந்த நான்கரை வருடங்களில் கண்டி மாவட்டத்தில் தமிழ்க் கல்வித்துறையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றெ கூறவேண்டும்.

கெர்க்கஸ்வோல்ட் இல 01தமிழ் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான பணிகள் ஆரம்பம்!!

அட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 01தமிழ் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் ஆரம்பகட்ட பணி 09.09.2019.திங்கள் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
error: Content is protected !!