முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 4, 2019

சௌமியமூர்த்தி தொண்டமானின் படத்தை போட்டு ஓட்டு கேட்கின்றார்களே வெக்கமில்லையா? ராமேஸ்வரன் ஆவேசம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி மலையகத்தில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன அந்தவகையில் இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் தவாக்கலை பாமஸ்ரன் பகுதியில் நேற்று கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரதித்து தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் தொடர்பில் முறையான திட்டங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் ; எஸ். பாலசேகரன் கோரிக்கை!

ஆசிரியர்கள் தொடர்பாக சிறந்த அபிவிருத்தின் திட்டம் ஒன்றினை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன் வைக்க வேண்டுமென தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாலசேகரன் தெரிவித்தார். நேற்று (03) மாலை தலவாக்கலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் … அரசாங்க வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஆறு சதவீதம் ஒதுக்கப்பட்ட போதிலும் அந்த நிதியின் பாடசாலை கட்டடங்களையும் உட்கட்டமைப்பு மதிய உணவு ,சீருடை புத்தகங்கள் போன்ற...
Read More

மலையகத்தில் பொலிஸார் தபால் மூலம் வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் 04.11.2019 அன்றும், 05.11.2019 அன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்தவகையில், மலையகத்தில் இன்று காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர். 04.11.2019 அன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸார் சென்று வாக்களித்து வருகின்றனர். இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (க.கிஷாந்தன்)

ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் மற்றும் மூலப்பொருட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

பூண்டுலோயா பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று மாலை பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் கஞ்சா என்பனவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் விளையாட்டு காட்ட முடியாது! அட்டனில் தெவரபெரும எம். பி. தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் கடந்தமுறை காண்பித்த விளையாட்டுகளை இம்முறை எங்களிடம் காட்டமுடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதி வழங்க முடியாதுயென களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும தெரிவித்துள்ளார். நேற்று அட்டனில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அன்னத்திற்கு வாக்களித்தால் மாத்திரமே மலையக மக்களின் உரிமைகளையும் காணிகளையும் பாதுகாக்க முடியும்! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு

இம்முறை இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள் அண்ணசின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித்பிரேமேதாச அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் மாத்திரமே மலையக மக்களின் உரிமைகளையூம் கானிகளையும் பாதுகாக்க முடியூமென கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து தேயிலை தோட்டங்களை அழிப்போமா? சதாசிவம் கேள்வி

ஜனவசமாகவும் அரச பெருந்தோட்டங்களாகவும் காணப்பட்ட தோட்டங்களை 21 கம்பனிகளுக்கு பிரித்து கொடுத்து எமது மக்களை கொத்தடிமையாக்கியது, ஐக்கிய தேசிய கட்சி, அன்று தோட்டங்களை பிரித்து கொடுக்கும் போது பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான்.

தனியான மாடிவீடு திட்டத்தையே கோரியுள்ளோம்.ராமேஸ்வரன் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்துள்ள நிலையில் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் மீண்டும் மாடி வீட்டு திட்டமே அறிமுகப்படுத்தப்படுமென சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சருமான மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமேதாசவின் வெற்றியினை எந்த தரப்பினரினாலும் தடுக்க முடியாது! அட்டனில் அமைச்சர் இராதகிருஷ்னண்

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்பிரேமேதாச அவர்களுடைய வெற்றியினை எவராலும் தடுக்கமுடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

வேலுகுமாரின் கோரிக்கையை ஏற்றார் சஜித்

கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கான விசேட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் எம்.பியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.
error: Content is protected !!