முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 6, 2019

ஹிட்லர் ஆட்சியா வேண்டும்? மக்களே தீர்மானிக்கட்டும்! இராகலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க போவது ஜனநாயகத்தை கடைபிடிக்கின்ற தலைவரயா அல்லது ஹிட்லர் போன்ற ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா ஒரு செல்லாக்காசு – அட்டனில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான்

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தவைரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பொகவந்தலாவவில் சட்டவிராத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை ஆற்றில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொழுந்து தராசில் மோசடி – கையும் களவுமாக பிடித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி செய்யப்படுகின்றதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலிடம் வைக்கப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த இடத்திற்கு சென்று தராசில் மோசடி செய்யப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

பூண்டுலோயாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

பூண்டுலோயா – தலவாக்கலை வீதியில் (06/11/2019) முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

செல்லசாமிக்கு தெரியாத இ.தொ.கா வரலாறு கனகராஜுக்கு தெரியுமா? – திலகர் எம்பி கேள்வி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் தான் மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக இ.தொகா முன்னாள் பொதுச் செயலாளர் சிரேஷ்ட அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமி உறுதிபட கூறுகின்ற வரலாற்றை, அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு எதிரான அரசியல் அணியில் இருந்து அவர்களை இறக்குமதி அரசியல் என விமர்சனம் செய்த கணபதி கனகராஜ் மறுப்பது வேடிக்கையானது என தமிழ் முற்போக்கு கூட்டணி யின் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் குடியிருப்பை கிராமங்களாக அமைப்பதே எமது நோக்கம்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

மலையக மக்களின் குடியிருப்பை கிராமங்களாக அமைப்பதே எமது நோக்கமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!