முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 10, 2019

ஐ.நா வீடமைப்பில் பிரபலமான ஜனாதிபதியின் பிள்ளையா ? குற்றவாளி என கூண்டில் நிற்கும் கோட்டா – பய புள்ளயா ? திலகர் எம்பி ஆவேசப் பேச்சு

இலங்கையின் இரண்டு பெயர்கள் ஐக்கிய நாட்டு சபை அரங்கில் பிரபலமானவை. ஒன்று ஏழை எழிய மக்களுக்கு வீடமைத்து சர்வதேச புகழ்பெற்று 1987 ம் ஆண்டை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனம் செய்ய வழிவகுத்த சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச. இரண்டாம் அவர் மக்களை வெள்ளை வேனில் கடத்தியும் கொத்து கொத்தாக கொன்று குவித்து ஐ.நா முன்பு குற்றவாளி கூண்டில் நிற்கும் சர்வதேச குற்றவாளி கோட்டாபய ராஜபக்‌ஷ. சஜித் அந்த ஜனாதிபதி புள்ள.எனவே இந்த ஜனாதிபதி தேரத்தலானது,...
Read More

தோட்டத்தொழிலாளர்களை புலிகள் என்று அழைத்தவர் மஹிந்த ராஜபக்ஸ! தலவாக்கலையில் பிரதமர் தெரிவிப்பு

மலையகத்தில் வாழுகின்ற மக்கள் இன்று மிக முக்கிய இடமொன்று வழங்கப்பட்டுள்ளது இந்த நாட்டின் பிரஜைகளாக அவர்களை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் அவர்களை விடுதலை புலிகளாகவே பார்த்தனர். அது மட்டுமல்ல நகரங்களிலிருந்து வெளியேறி விடவில்லை. கொழும்புக்கு வர விட வில்லை. தொழில் புரிய விடவில்லை சிலர் மாயமானார்கள், இன்னும் சிலர் வெள்ளை வேனில் கொண்டு சென்றார்கள். இன்று அவை ஒன்றுமில்லை எவரும் காணாமல் போவதுமில்லை. கொழும்புக்கு சென்று வேலை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளன....
Read More

உங்கள் அனைவருக்கும் நான் நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பேன்! தலவாக்கலையில் சஜித்

எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தோட்டத்தில் வாழும் சுமார் 12 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார்.அவரது மகனான நான் சஜித் பிரேமதாச ஆகிய நான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த நாளே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்குவேன.; என ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்கள் என்ற நாமத்தினை மலையக விவசாயிகள் என்று மாற்றுவோம்! அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றிபெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனுபவமும் திறமையும் மக்களின் மனங்களை புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபை தேர்தலோ நகரசபை தேர்தலோ மாகாண சபை தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ அல்ல இது இந்த நாட்டின் தலைவரை அதாவது இன்னும் எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் எங்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில் பிரச்சாரக் கூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் மாபெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

யார் வந்து என்ன சொன்னாலும் தோட்ட மக்கள் சஜித்துக்கே வாக்களிப்பார்கள்! அமைச்சர் இராதாகிருஸணன்

தோட்டங்களுக்கு நாம் இன்று தேர்தல் பிரசாரங்களுக்காக செல்லும் மக்கள் சொல்கின்ற விடயம் தான் யார் எது வந்து சொன்னாலும் இம்முறை நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு தான் வாக்களிப்போம் என்று. ஆகவே நாங்கம் மக்களுக்கு மேலும் தொல்லை கொடுக்காமல்,நீங்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னாலே போதுமானது.

கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை தோட்டதொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமாயின் ஒத்துழைப்பு! ஆறுமுகன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடுவதாக கூறப்பட்ட ஜம்பது ரூபா கொடுப்பனவானது கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை ஜம்பது ரூபா கொடுப்பனவு வழங்கபடுமாயின் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டிற்கு குவிந்த மலையக இளைஞர்கள்

சிறிலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இளைஞர் மாநாடு ஒன்று நேற்று வட்டவலை ரொசால்லை பேன்குயின்ஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ச – நுவரெலியா கூட்டத்தில் மகிந்த தெரிவிப்பு

சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுது கூறினார்.
error: Content is protected !!