முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 12, 2019

கோட்டபாய செய்ய முடிந்த வாக்குறுதிகளை மாத்திரமே சொல்கிறார்! லெஸ்லி தேவேந்திர ஹட்டனில் தெரிவிப்பு

இந்த அரசாங்கம் செய்ய முடியாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது ஆனால் கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தனக்கு செய்;ய கூடிய விடயங்;களையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை மாத்திரமே தெரிவித்துவருகிறார்.ஆகவே யார் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கின்றார்களோ? அவர்களை ஆதரிப்பதே சிறந்தது. என ஸ்ரீ லங்கா சுத்ந்திரகட்சியின் தொழிற்சங்க செயலாளர் லெஸ்லி தேவேந்திர ஹட்டன் டிக்கோயா நகரமண்டபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டா ஜனாதிபதி ஆனால் தொட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா? திலகர் எம்.பி கேள்வி

கூட்டு ஒப்பந்த முறையின் கீழ் எப்போது தோட்டங்கள் சென்றனவோ அன்றில் இருந்தே தோட்டங்கள் காடாகத் தொடங்கின. அந்த ஒப்பந்தத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கூடிப்பேசி ஒப்பமிடும் போது தோட்டத்துக்கு சிறுத்தை வருவதைப் பற்றி பேசாத தலைவர்கள் இப்போது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதனைப் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. கோட்டா ஜனாதிபதி ஆனால் தோட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா? வேண்டுமானால் நமது இளைஞர்களை புலிகளை என கூறி சுடுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
Read More

50 ரூபாவை வழங்க முடியாத தற்போதைய அரசாங்கம் 1500 ரூபாவை எப்படி வழங்குவார்கள்? மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி?

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜம்பது ருபா வழங்குவதாக கூறிய ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1500 ரூபாவை இந்த தொழிலாளர்களுக்காக ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச எவ்வாறு வழங்குவார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ழூலமாக மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஸ மூலமாக மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எமது அரசாங்கத்தில் தான் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டது! கொட்டகலையில் மஹிந்த தெரிவிப்பு

எமது அரசாங்கத்தில் தான் மலைய மக்களுக்கும் மலையக பகுதிக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டதாக ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்தராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படும்! கொட்டகலையில் கோத்தபாய தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றிபெற்றவூடன் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவூம் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தபடுமென ஸ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உறுதி வழங்கியூள்ளார்.

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பதால் எமது ஒற்றுமை கேள்விக்குறியாகும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுக்கப்பட்ட முடிவானது அவர்கள் நீண்ட ஒரு கலந்துரையாடல் மற்றும் இரண்டு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் உட்பட கடந்த காலங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!