முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 24, 2019

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை அமைக்க அமைச்சர் ஆறுமுகன் பணிப்புரை!

அட்டன் போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு சுமார் ஒரு வருட காலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு உடனடியாக வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் பணியினை முன்னெடுக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 23.11.2019 அன்று குறித்த தோட்டபகுதிக்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்த போது உரிய அதிகாரிகளுக்கு இந்த பணிப்புறையை விடுத்தார். இதன் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்...
Read More

செந்தில் தனது கூற்றை வாபஸ் பெற வேண்டும் ; இல்லையேல் ஆர்ப்பாட்டம், அட்டனில் இளைஞர்கள் கொந்தளிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றி மலையகத்தில் வாழும மக்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லாவிட்டால், நாடெங்கிலும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க போவதாக மலையக கல்வி கற்ற இளைஞர்கள் சார்பாக என் கிசான்குமார் தெரிவித்தார். இன்று (24) ஹட்டனில் இளைஞர்கள் சிலர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;. அவர் அங்கு தொடர்ந்து கருத்தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் செந்தில்...
Read More

வீதியை ஊடறுத்த பன்றிகளால் ஏற்பட்ட விபத்து; போக்கவந்தலாவையில் லொறி பள்ளத்தில் வீழ்ந்தது!

பலாங்கொடை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பொகவந்தலாவ – அட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 24.11.2019 அன்று காலை 5.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியில் குறுக்கே சென்றமையினால் வாகனத்தை...
Read More
error: Content is protected !!