முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 25, 2019

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி! சீ.பி.ரத்நாயக்க எம்.பி தெரிவிப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள்யின்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நோர்வூட்டில் தீ விபத்து – நான்கு கடைகள் தீக்கிரை

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் 25.11.2019 அன்று 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் சில பகுதிகளில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்ற இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கபட்டது.

சென்.மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும்

மத்திய மாகாணம் அட்டன் கல்விவலயம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 24.11.2019.ஞாயிற்றுகிழமை கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது! இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்று நாட்டின் அணைவருக்கும் ஜனாதிபதி ஒருவரே. நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அணைவருக்கும் பொதுவானவரே. எனவே இந்த நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. அதனை அவர் சரியாக செய்வார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!