முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 7, 2019

19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது – அட்டனில் சம்பவம்!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் என்பில்ட் தோட்ட லயன் குடியிருப்பு ஒன்றில் தோட்ட தொழிலாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யபட வைத்திருந்த 19மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸ்நிலைய குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 07.12.2019.சனிகிழமை பிற்பகல் வேலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம். பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் தெரிவிப்பு!!

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் பல விதிமுறைளை விதித்துள்ளது.அதாவது யாத்திரை வருவோருக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளது.யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண முடிவில் அந்தப் பையை திருப்பி கொடுத்து செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அட்டன் பகுதியில் சித்திரம்வரையும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்!!

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் பணிப்புரைக்கு அமைய நாடெங்கிலும் காட்சிபடுத்தபட்ட பெயர்பலகை சுவரொட்டிகளை அகற்றி சித்திரம்வரையும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு விடுக்கபட்ட பணிப்புறைக்கு அமைய அட்டன் பகுதியில் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளால் மேற்கொள்படும் சித்தரம்வரைதல் வேதலைத்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது .

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும்!!

எதிர்கட்சி பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியமையையிட்டு நாங்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நானூயா,சாமிமலை பகுதிகளுக்கு புதிய மகளீர் பிரதிநிதிகள் நியமிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பொகவந்தலாவ, நானுஓயா, சாமிமலை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயங்களுக்கு புதிய மகளிர் பிரதிநிதிகளை நியமிக்கும் வைபவம் நடைபெற்றது, இவ்வைபவத்திற்கு இ.தொ.கா இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வுட் பிரதேசசபை தலைவர் ரவிகுழந்தைவேல் மற்றும் நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமையான சுத்தமான நாடு செயற்திட்டத்தில் 07.12.2019 அன்று நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட தலவாக்கலை நகரத்தில் காணப்படும் பஸ் தரிப்பு நிலையம், புகையிரத நிலையம், பொது மலசலகூடம், பிரதான நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள பிரதேசங்களை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
error: Content is protected !!