முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 8, 2019

தலவாகலையில் இடம்பெற்ற சாய்பாபாவின் 94வது பிறந்த தின நிகழ்வு!!

சத்தியசாய் பாபாவின் 94வது பிறந்தநாள் நிகழ்வு 08.12.2019.ஞாயிற்றுகிழமை தலவாகலை டி.பி.தர்மலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது சத்திய சாய்பாபாயின் உருபடத்தினை ஏந்தியவாரு பேரணி ஒன்று டி.பி.தர்மலிங்கம் மண்டபம் வரைஅழைத்து வரப்பட்டு விசேட பூஜைகள் என்பன இடம்பெற்றதோடு சாய்பாபாவின் பஜனை கீதங்களும் இடம்பெற்றது இந்த பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது   பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

மஸ்கெலியா விளையாட்டு மைதானத்திற்கு மஸ்கெலியா பிரதேசசபையினால் பூட்டு!!

மஸ்கெலியா நகரப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த உதைப்பந்தாட்ட சுற்று போற்று ஒன்றுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னால் அமைச்சருமான பழனிதிகாம்பரம் 08.12.2019.ஞாயிற்றுகிழமை வருகை தரவிருந்த வேலை மஸ்கெலியா நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு மஸ்கெலியா பிரதேசசபையினால் இன்றைய தினம் மைதானத்தின் பிரதான நுளைவாய் பூட்டபட்டுள்ளதாக விளையாட்டு வீரர்களும் பிரதேசமக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தோட்டதொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெற்றுதர வேண்டும்!!

  புதிய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் வாக்குருதி வழங்கியவாறு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளத்தினை பெற்று கொடுப்பதில் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் முன்னால் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் 08.12.2019.ஞாயிற்றுகிழமை தோட்டதலைவர்மார்களுக்கான எதிர்கால அரசியல் நடவடிக்கை அட்டன் இந்ரா விருந்தகத்தில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றின் போது அவர் தெரிவித்தார்

7 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் தீ

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 08.12.2018 அன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளன!!

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் 07.12.2019 அன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
error: Content is protected !!