முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 30, 2019

புதிய அரசாங்கம் புது வருடத்தில் மக்கள் வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தும் மலையகத்தில் பல்துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினை தொடர்ந்து மக்கள் மத்தியில் பல்வேறு விதமான சந்தேகங்களையும்; முன்னாள் அரசியல் பிரமுகர்களும்,ஒரு சில குழுக்களும் செய்துவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்திலும் போட்டியிடலாம் – தடைகள் இல்லை – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்…..

பெருந்தோட்ட கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் Dr ரமேஸ்பத்திரன மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு பெருந்தோட்டத்துறை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் தோட்ட மக்கள்மீது இனவாதிகள் தாக்குதல்!

பெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த கிராமிய இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹய்லன்ஸ் பெருந்தோட்ட எல்லவெல பிரிவிலேயே, இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. இத்தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்ற வகையில் ஐவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் க.பொ.த. உயர்தரப் பெறுபேற்றினை எதிர்நோக்கியிருந்த மாணவன் ஒருவனும் அடங்கியுள்ளார்....
Read More

மகளிர் மாநாடும் செயலமர்வும்…

தொழிலாளர் தேசிய சங்கம்,தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் அணி கிளைத் தலைவிகளுக்கான மாநாடும் செயலமர்வும் இன்று நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்றது.

ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்கள் மாத்திரம் அபிவிருத்தி அல்ல. சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளும் அபிவிருத்திகளே..

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அறிதல் அவசியமான ஒன்றாகும். உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் தத்தமது சபைகளில் இந்த வன்முறைகளுக்கு எதிரான குரல்களை எழுப்புவதுடன் சபைகளின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் தலைமை கொடுக்கவும் முன்வர வேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளை நாம் தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளோம். ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்கள் மாத்திரம் அபிவிருத்தி அல்ல. இத்தகைய சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளும் அபிவிருத்திகளே என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற...
Read More

உணவு ஒவ்வாமையினால் 30 பேர் வைத்தியசாலையில்….

விசேட விருந்துபசார வைபவம் ஒன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதர தோட்டத்தில் சிறுமி உட்பட 30 பேர் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தோட்டநிர்வாகத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் கிழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்ட தோட்டத்திற்கு சொந்தமான கானியை தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி அபகரித்த குற்றச்சாற்றில் ஏழு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகம் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் 29.12.2019.மாலை முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் மஞ்சள் கோட்டில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்து ஒருவர் காயம்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தியில் உள்ள மஞசள் கோட்டுப்பகுதியில் இன்று (30) பகல் 12.00 மணியளவில் திகதி மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்,பத்தனைபகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கரவண்டி,கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பிரதேசத்தினை நோக்கி வந்துகொண்டிருந்த ஜீப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குளவி கொட்டுக்கு இழக்காகிய லிந்துலை ஹென்போல்ட் தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
error: Content is protected !!