முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது!!

ஆயர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது அட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் அட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களினால் 10.07.2019 அன்று கைது செய்யபட்டுள்ளார்.

அட்டன் பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நிலையதிற்கு சென்ற அட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள், விசாரணைகளை மேற்கொண்டபோது இதற்கு முன்பு குறித்த ஆயர்வேத வைத்திய நிலையத்தினை நடாத்தி வந்த வைத்தியர் ஒருவரினால் பெறபட்ட அனுமதியினை வைத்து குறித்த நபர் அட்டன் டிக்கோயா நகரசபையினால் அனுமதி பெறாது இந்த வைத்திய நிலையத்தினை நடாத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யபட்ட ஆயுர்வேத வைத்தியர் அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும், குறித்த வைத்திய நிலையத்தில் ஆயுர்வேத மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் உபகரணங்கள் அனைத்தும் மீட்கபட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியர் டிக்கோயா பகுதியை சேர்ந்தவர் எனவும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle