முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியில் தோன்றி எடுக்கபட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு- தாய் உயிரிழப்பு!!

கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியில் தோன்றி எடுக்கபட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு- தாய் உயிரிழப்பு!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்டபகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோன்றியெடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈன்டெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 13.07.2019. சனிகிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ட்ரொக்சி அவர்களின் தலைமையில் விசாரனைகள் மேற்கொண்டதன் பிறகே குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கபட்டது

சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது குறித்த பெண் திடிர் சுகயீனம் காரனமாக
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேலை உயிர் இழந்துள்ளார் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில்
வைக்கபட்ட குறித்த பெண்ணின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்

கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட போது தமது வீட்டின் அறையில் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிமை தொடர்பில் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த ஆடைகளில் பாரிய இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர் பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் இவ்வாறு உயிர் இழந்த பெண் கொட்டகலை யுனிபீல்ட் தோட்டபகுதியை சேர்ந்த 39வயதுடைய 03பிள்ளைகளின் தயாரான ஆர் வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதோடு குறித்த பெண்ணுக்கு 12,07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கபட்ட சிசுவின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத
பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனையின் பின்னர் இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum