முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தமிழ் கலைஞர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை; கொட்டகலை கூட்டத்தில் மகிந்தகுமார் கவலை !

தமிழ் கலைஞர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை; கொட்டகலை கூட்டத்தில் மகிந்தகுமார் கவலை !

தமிழ் கலைஞர்கள் என்ற வகையில் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்து வருகின்றோம.; இன்று நாட்டில் உள்ள ஏனைய கலைஞர்களுக்கு அதாவது பெரும்பான்மை கலைஞர்களுக்கு கிடைக்கின்ற அங்கிகாரம் களம் சலுகைகள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. அதனால் ஆரம்ப காலத்தில் தங்களது வாழ்க்கையினை நல்ல முறையில் வைத்திருந்த கலைஞர்கள் பலர் இறுதி காலத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.இன்று பலர் பல்வேறு பட்ட கஸ்ட்டங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பற்றி ஊடகங்களோ அல்லது வேறு எந்த அமைப்பினரோ அல்லது அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. எனவே தான் நாங்கள் இலங்கை தமிழ் இசைக்கலைஞர் என்ற சங்கத்தினை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த அமைப்பின் ஊடாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கலைஞர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்கு நல்ல களத்தினை அமைத்து கொடுத்து அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்குவதே எமது ஒரே நோக்கம.; என, இலங்கை தமிழ் இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவர் கே.மஹிந்தகுமார் தெரிவித்தார்.
மலையக இசைக்கலைஞர்களுடன் ஒன்றினையும் நிகழ்வு இன்று (16) திகதி காலை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் அமைப்பின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்று நாம் எத்தனையோ சொந்த பாடல்களை பாடினாலும் சரி, சொந்த இசையினை இசைத் துறையில் வெளியிட்டாலும் கூட அவற்றிக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. ஊடகங்களும் எமது கலைஞர்களின் கலைத்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து வரும் கலைஞர்களுக்கே அனைத்து சலுகைகளும் செய்து கொடுக்கப்படுகின்றன, ஆனால் நாம் வெளிநாடுகளுக்கு சென்று பாடுவதற்கேற்ற சூழல் இது வரை உருவாக்கப்படவில்லை. அதனை நாம் உருவாக்கி கொள்ள வேண்டுமானால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது திறமைகளை மேலும் வலுவூட்டி எமக்கு தேவையான வற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் அத்தோடு அரசாங்கம் இன்று கலைஞர்களுக்காக பல்வேறு நலன்புரி விடயங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதனை கூட பெற்றுக்கொள்ள தெரியாத நிலையிலேயே எமது கலைஞர்கள் உள்ளனர்.
அரசாங்கம் இன்று கலைஞர்களுக்காக கடன் வழங்குகிறது.அத்தோடு வட்டியில்லா வாகன கடன் வழங்குகிறது.அது மாத்திரமின்றி சாதனை படைத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பதுடன் பணப்பரிசும் வழங்குகிறது. இது எதனையுமே நாம் பெற்றுக்கொள்வதில்லை. இந்நிலை மாற்றி கலைஞர்களின் இசைத் துறையினை மேம்படுத்தி சமூக பொருளாதார ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

அது மாத்திரமன்றி எமது அமைப்பின் ஊடாக சிறந்த கலைஞர்களை கோண்டு மேலும் பயிறிசி பட்டடறைகளை உருவாக்கி, அவர்களின் இசை திறமையினை இந்த நாட்டில் மட்டுமன்றி வெளிகடுக்கு கொண்டு செல்ல கூடிய அளவுக்கு அவர்களை ஊக்குவிப்பதுடன் அரசியல் ரீதியாக கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து உரிமைகள் ஆகியனவும் இந்த ஒன்றியத்தினுடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை இசைக்கலைஞர் சங்கத்தின் உபதலைவர் செந்தூரன்,செயலாளர் ரட்ணம் ரட்ணதுறை,உப செயலாளர் ஸ்ரீ வத்சலா,பொருளாளர் மோகனரூபன்,உப பொருளாளர் வாகிசன்,மலையக இசைக்கலைஞர் ஒன்றியத்தின் சார்பாக தலைவர் டி.பி.சரஸ்தீன், செயலாளர் ரஜனிகாந்த்,பொருளாளர் சிவகுமார் உப தலைவர் அசோக்குமார் உட்பட மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்.

Leave a Reply

error: Content is protected !!