
நாவலபிட்டி ஜயசுந்தரவிட்டபகுதியில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் உட்புகந்ததால் 20 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றம்!!
நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஜயசுந்தர பகுதியில் 20குடியிருப்புக்குள் வெள்ள நீர் உட்புகுந்தமையினால் 20குடும்பங்களை சேர்ந்த 75பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
மகாவளி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாகவே வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது . பாதிக்கபட்ட 20குடும்பங்களை சேர்ந்த 75பேரும உறவினர்களின் வீடுகளிலும் அயலவர்களின் வீடுகளிலும் தங்க வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலு குறிப்பிட்டனர்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ.சதீஸ்)
272 total views, 2 views today