
நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு!!
நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நோர்வூட் பிரதே சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை தலைவர் தெரிவித்தார்.
க.கிஷாந்தன்
430 total views, 2 views today