முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கபட்டமக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரோடு இடம்பெற்ற கலந்துரையாடல்!!

சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கபட்டமக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரோடு இடம்பெற்ற கலந்துரையாடல்!!

மலையகத்தில் கடந்த வாரம் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவுகளினாலும் வெள்ள
நீரினாலும் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கபட்ட மக்களின் நிவாரணங்கள்
மற்றும் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் இலங்கை
தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய இலங்கை தொழிலாளர் காங்ரசின்
உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல்
தலைமையில் குழு ஒன்று நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார
அவர்களை 16.08.2019.வெள்ளிகிழமை சந்தித்தனர் இந்த சந்திப்பில் அசாதாரன சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளல் லயன் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பாரிய கற்களை அகற்றுதல் லயன்குடியிருப்புகளுக்கு அருகில் கானபடுகின்ற ஆறுகளை
அகலபடுத்துதல் போன்ற நடவடிக்கை குறித்து கலந்துரையாடபட்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தேசிய அமைப்பாளரும்
முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுறை கொட்டகலை பிரதேசசபையின்
தலைவர் ராஜமணி பிரசாத் நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வேலுயோகராஜ்
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் சென்பகவல்லி.அக்கரபத்தனை பிரதேச சபையின்
தலைவர் எஸ்.கதிர்செல்வன் நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் ரவிகுழந்தைவேல்
ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!