முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவ சீனாகொலையில் சந்தேகத்துக்கு இடமாக மனித எச்சங்கள் மீட்பு – பொலிஸாரினால் தீவிர விசாரனை!!

பொகவந்தலாவ சீனாகொலையில் சந்தேகத்துக்கு இடமாக மனித எச்சங்கள் மீட்பு – பொலிஸாரினால் தீவிர விசாரனை!!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரிபிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மானா தோப்புபகுதியில் சந்தேகத்து இடமாக மனித எச்சங்கள் சில 18.08.2019.ஞாயிற்றுகிழமை 12.30மணியளவில் இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை இனங்கண்ட பொதுக்கள் குறித்த கையடக்க தொலைபேசியினை பொலிஸாருக்கு ஒப்படைத்ததை முன்னிட்டு தொலைபேசியில் உள்ள தகவல்களுக்கு அமைய ஆரம்பிக்கபட்ட விசாரனைகளின் போது இரண்டாம் இலக்க தேயிலை மலையின் மனித எச்சங்களை பொகவந்தலாவ பொலிஸார் இனங்கண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலை பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு கானாமல் போயுள்ள நபர் எனவும் சந்தேகிக்கபடுவதோடு மனித எச்சங்கள் கிடக்கும் பகுதியில் டி.சேட் ஒன்றும் நீட்ட காட்சட்டையும் இனங்கானபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் அட்டன் நீதிமன்ற நீதிவான் வரவழைக்கபட்டு விசாரனைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!