முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இரு நாட்கள் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு இராவணாகொடவில் சம்பவம்!!

இரு நாட்கள் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு இராவணாகொடவில் சம்பவம்!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட இராவணாகொட விஜயபாகு கந்த பகுதியில் வீட்டிலிருந்து சடலமாக இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் தனியாகவே வீட்டில் இருந்து வந்துள்ளார்.இரு தினங்களாக குறித்த இளைஞன் காணமால் போயுள்ளார்.அதே சந்தர்பத்தில் குறித்த இளைஞனின் வீடும் பூட்டியிருக்க அக்கம் பக்கத்தினர் கிராம சேவகரின் உதவியுடன் குறித்த இளைஞனின் வீட்டை திறக்க குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடனே குறித்த பகுதிமக்கள் திம்புள பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க திம்புள பத்தனை பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!