முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்ட துரையின் அடாவடி தனத்தால் தோட்ட தொழிலாளர்கள் 3 நாட்கள் தொடர் பணி பகிஸ்கரிப்பு!!

தோட்ட துரையின் அடாவடி தனத்தால் தோட்ட தொழிலாளர்கள் 3 நாட்கள் தொடர் பணி பகிஸ்கரிப்பு!!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொங்காலை தோட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் பணி பகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கொலப்பத்தனை தோட்டத்தின் தலைவரை தோட்ட துரை அடிக்க முற்பட்டமையினாலே இவ்வாறு பணிபகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தோட்ட துரை தன் பங்களாவிலிருந்து மக்கள் குடியிருப்பு சென்ற நீரை பாவிக்க முற்பட்ட போது தோட்ட துரை தலைவரை கூப்பிட்டு அடிக்க முற்பட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பல பேரை அடிக்கடி அடிக்க முற்படுவதால் தோட்ட துரையை மாற்ற கோரி கொலபத்தனை தோட்ட மக்கள் அனைவரும் தோட்ட துரை இடம் மாறும் வரை பணிபகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுல்லாமல் கொலப்பத்தனை பிரிவுகளான கொங்கலை மற்றும் தலப்பத்தனை பகுதிகளிலும் குறித்த பிரச்சனைக்காக தோட்டத்தொழிலாளர்கள் பணி பகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!