முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கோயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி இரண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளது. கெலிவத்தையில் சம்பவம்!!

கோயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி இரண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளது. கெலிவத்தையில் சம்பவம்!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் அம்மன் ஆலயத்தை உடைத்து இரு அம்மன் சிலைகளில் காணப்பட்ட தாலிகள் கலவாடப்பட்டுள்ளது.

இன்று(10) அதிகாலை கோயில் அர்ச்சகர் கோயிலை திறக்கும் போதே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் உண்டியலில் காணப்பட்ட தாள் காசுகளும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் திம்புள பத்தனை பொலிசாருக்கு முறைபாடொன்றை மேற்கொண்ட சமயம் இருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!