முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > குளவி கொட்டுக்கு இலக்காகிய 11பேர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவி கொட்டுக்கு இலக்காகிய 11பேர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதி!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் உள்ள 05ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 11தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.09.2019.புதன்கிழமை காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக தெரிவித்தனர் ஜந்தாம் இலக்க தேயிலை மலையில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை ஆண் தொழிலாளர் புற்களுக்கு மருந்து அடித்து கொண்டிருந்த போது மருந்தின் வாய்வு காரனமாக முருங்கை மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 10 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் மொத்தம் 11பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!