முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்!!

அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்!!

அட்டன் போடைஸ் 30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கடந்த வருடம் (29.12.2018) அன்று தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்திருந்த நூற்றுக்கு அதிகமான மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவில்லையென தெரிவித்து இரண்டாவது முறையாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் 09.10.2019 அன்று காலை ஈடுப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமது கோரிக்கைகளை கோஷமிட்டும் பாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக சென்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியானது தாம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பு பகுதியிலிருந்து அட்டன் போடைஸ் பிரதான வீதி வழியாக போடைஸ் தோட்ட தொழிற்சாலை வரை நடை பவனியாக சென்றனர்.

இதையடுத்து பேரணியாக சென்ற பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாம் வாழ்ந்து வந்த லயன் குடியிருப்புகளில் தீயினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்தை எட்ட இன்னும் ஒன்றரை மாதங்களே காணப்படும் நிலையில் ஆரம்பத்தில் எமக்கு தனி வீடுகள் அமைத்து தருவதாகவும், அதற்கான காணிகளை பெற்று தருவதாகவும் உறுதி கூறிய தலைவர்களும், அமைச்சர்களும் எம்மை மறந்து விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் எமக்கு வீடுகளை அமைத்து கொடுக்க பல்வேறு அரசியல் தொழிற்சங்க கருத்து முரன்பாடுகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரச்சினை காணப்படுவதாகவும், இதனால் வீடு கட்டுவதற்கான இடங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை தோண்டியுள்ளதாகவும், எமக்கு தொழிற்சங்க மற்றும் அரசியல் தரப்பினர் தெரிவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இது தேர்தல் காலம் என்பதால் எமது வாக்குகள் கட்சிகளுக்கு தேவைப்படும் ஆகையால் எமது நிலையை இத்தருணத்தில் வெளிக்கொணர்ந்து தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பேரணியூடான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் தற்காலிகமாக வசித்து வரும் கூடாரங்கள் காலநிலை மாற்றத்தால் பாதக்கப்பட்டுள்ளதுடன், கரையான் அறிக்கும் நிலைக்கும் சென்று அங்கும் துன்பகரமான வாழ்க்கை வாழ்வதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

எனவே எம்மால் இனிமேலும் பொறுத்து போக முடியாத நிலைக்கு வந்துள்ளதால் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் நேரிட்டுள்ளது.

எமது கோரிக்கை எமக்கு வாழ்வதற்கு வீடுகளை அமைத்து தாருங்கள் என்று மாத்திரமே இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும். இத் தீர்வை அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் எம் மத்தியில் வந்து தரவேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதத்திலும் நாம் ஈடுபட ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle