முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் விளையாட்டு காட்ட முடியாது! அட்டனில் தெவரபெரும எம். பி. தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் விளையாட்டு காட்ட முடியாது! அட்டனில் தெவரபெரும எம். பி. தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் கடந்தமுறை காண்பித்த விளையாட்டுகளை இம்முறை எங்களிடம் காட்டமுடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதி வழங்க முடியாதுயென களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும தெரிவித்துள்ளார்.

நேற்று அட்டனில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஜ கட்சியினருக்கு இம்முறை இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது அவர்கள் ஏற்கனவே தோற்கடிக்கபட்டார்கள்.

இந்த இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது வெற்றி பெருகின்ற மற்றும் பெருமதியான வாக்குகள் அனைத்தையும் மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வழங்குவார்கள். இன்று ஜக்கிய தேசிய கட்சியினை பார்த்து கேட்கிறார்கள் ஜக்கிய தேசிய மக்களுக்கு என்ன செய்தது என்று நான் அவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள ஆசைபடுகிறேன் ஜக்கிய தேசிய கட்சிதான் இந்த மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுகொடுத்தது.

எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சிபீடம் ஏறிய உடன் மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடமைப்பு திட்டம் கானி உறுதிப்பத்திரம், வீதிகள் புனரைப்பு என்பன மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு சுதந்திரமாக தமது வாழ்க்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும். நான் முதலில் பிரதேச சபை தலைவர் அதன் பிறகு மாகாணசபை உறுப்பினர் அதன் பிறகு நான் பாராளுமன்ற உறுப்பினர் இந்த இடத்திற்கு என்னை கொண்டு சென்றது தமிழ் மக்கள்.

நான் ஜந்து தடவைகள் வாக்கு கேட்டுள்ளேன் ஆனால் அன்று முதல் இன்று வரை தோட்டபகுதியில் உள்ள மக்கள் எட்டு அடி தொடக்கம் பத்து அடி லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு சொந்தகாணி வியாபார நிலையம் அமைத்தல் போன்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள எதிர்வரும் 16ம் திகதி சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்த நாட்டில் அனேகமான தமிழ் கூலி தொழில் ஈடுபடுகிறார்கள் கொழுந்து பறிக்கும் முதல் தொழிற்சாலைகளில் தொழில் புரிகிறார்கள் உணவகங்களில் தொழில் புரிகிறார்கள் இது போன்ற தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்க அநேகமான காணிகள் இருக்கின்றன. அதனை வழங்க நிறுவனங்கள் முன்வருவதில்லை எனக்கு அதற்கான பலம் இருந்தால் அதனை நாம் பெற்றுக்கொடுப்பேன் என குறிப்பிட்டார்

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!