முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆசிரியர்கள் தொடர்பில் முறையான திட்டங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் ; எஸ். பாலசேகரன் கோரிக்கை!

ஆசிரியர்கள் தொடர்பில் முறையான திட்டங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் ; எஸ். பாலசேகரன் கோரிக்கை!

ஆசிரியர்கள் தொடர்பாக சிறந்த அபிவிருத்தின் திட்டம் ஒன்றினை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன் வைக்க வேண்டுமென தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாலசேகரன் தெரிவித்தார்.
நேற்று (03) மாலை தலவாக்கலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …
அரசாங்க வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான நிதி ஆறு சதவீதம் ஒதுக்கப்பட்ட போதிலும் அந்த நிதியின் பாடசாலை கட்டடங்களையும் உட்கட்டமைப்பு மதிய உணவு ,சீருடை புத்தகங்கள் போன்ற வசதிகளை மாத்திரமே பெற்றுக்கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுகின்றாதா?ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்படுகின்றன? என்பன இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளன.
இதனால் ஆசிரியர்கள் பத்து பதினைந்து வருடமங்களுக்கு மேலாக நிலுவை சம்பளத்தினையும் சம்பளத்தினை பெற முடியாது உள்ளனர்.அத்தோடு அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பள முறன்பாடுகளை தீரத்து வைக்காமல் இருப்பது மிகவும் வேதனை குறிய விடயம்.
இந்நிலையில் ஆசிரியர் நிதி நிறுவனங்களின் கடன்களை பெற்று அந்த கடனை செலுத்த முடியாதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரத்து வருகின்றன. அதிகமான ஆசிரியர்கள் பாடசாலையின் விடுதிகளிலும்,வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்களின் குடும்ப வாழ்க்கை பல்வேறு நெருக்கடியா சந்தர்ப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் தங்களுடை பிள்ளைகளின் கல்வி செலவீனங்களை கூட செய்ய முடியாதவர்களாக மாறியுள்ளனர்.
ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால் ஜனாதிபதி வேட்பாளர்கள் சிறந்த அபிவிருத்தி திட்டம் ஒன்றினை முன் வைக்க வேண்டும் அத்தோ வாக்குறுதிகளையும் வழங்க வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆசிரியர் சமூகத்தனை கண்டு கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கிறது.
அழுத பிள்ளைக்கு தான் பால் என்பது ஒரு நல்ல தாய் அல்ல நல்ல தாயாவள் பிள்ளை அழுகாமலே பிள்ளைக்கு பால் உணவு கொடுக்க வேண்டியது ஒரு நல்ல தாயின் கடமை. ஆகவே ஒரு நல்ல அரசாங்கத்திற்கு போராட்டம் செய்து,ஆர்ப்பாட்டம் செய்து சத்தியாகிரகம் செய்து தங்களுடைய உரிமை பெற்றுக்கொடுப்பது அழகல்ல.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்
அதே கல்விக்கான கொள்கைகளை வகுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும.; இன்று அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்படும் சுற்று நிரூபங்கள் முறையாக அழுல்படுத்தப்படுவதில்லை ஆசிரியர் இடமாற்றத்திற்கான கொள்கைகளை வகுப்பட்டிருந்த போதிலும் அதனை அதிபர்கள் அதிகாரிகள் பின்பற்றப்படுவதில்லை.அதிபர் நினைத்தால் ஒரு ஆசிரியரை பத்து வருடங்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளக்கூடிய நிலையே காணப்படுகின்றன. ஒரு அதிபர் பத்து பதினைந்து வருடங்கள் ஒரே பாடசாலைகயில் இருக்கும் நிலை இன்றும் உள்ளன.
இதே வேளை ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் போது ஆசிரியர் சேவையின் பயிற்றப்படாது ஆசிரியர் அதாவது ஆசிரியர் சேவையின் 3 11 இரண்டுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் அல்லது பயிற்றப்பட்ட 3 1 நியமனம் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும.; ஆனால் அண்மையில் அரசாங்கம் உதவி ஆசிரியர்கள் என்று ஒரு நியமனத்தினை வழங்கியுள்ளது.இதனால் அவர்களுக்கு என்று ஒரு பயிற்சி கலாசாலை கிடையாது. உதவி ஆசிரியர்க பயிற்சி கலாசாலை என்று ஒன்று இல்லை இவ்வாறான செயப்பாடுகள் ஆசிரியர் சேவையில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.ஆகவே அரச சேவையில் அதிகமாக காணப்டுகின்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் எவராயினும் சரி முறையான தி;ட்டங்களை முன் வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Leave a Reply

error: Content is protected !!