மலையகத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

மலையகத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

மலையக அரசியல் தலைவர்கள் தங்களுக்கிடையே விமர்சன அரசியலினை கைவிட்டு அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பார்களேயானால் இந்த சமூகத்தின் விடிவு மிக தொலைவில் இல்லை. சிறந்த உதாரணமாக அண்மையில் ஒரு சில முஸ்லிம் அமைச்சர்ளுக்கு பிரச்சினை ஏற்பட்ட பொழுது அந்த சமூகத்தைச் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களையும் வேற்றுமைகளையும் மறந்து ஒன்றாக பதவி விலகியமையானது அந்த சமூகத்தினுடைய ஒற்றுமையை எடுத்து காட்டியது இதனை மலையகத்தில் செய்ய முடியுமா?.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம் எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் கந்தபளை சர்மிளா மண்டபத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கந்தப்பளை நகர் வர்த்தகளும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஸ்ணன்,

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜீத் பிரேமாதாச அவர்கள் வெற்றி பெற்றவுடன் மலையக பகுதியில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து, அந்த தொழிற்சாலைகளில் ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆலோசனை வழங்கும். அந்த ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் கொழும்பிலுள்ள எமது இளைஞர் யுவதிகள் இங்கு வந்து வேலை வாய்ப்புக்களை ஆரம்பிக்க முடியும். இதனால் கணிசமான எண்ணிக்கையானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எமது இளைஞர் யுவதிகள் வெளியில் சென்று வேலை செய்வதனை நாங்கள் ஒரு போதும் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!