முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையக மக்களின் குடியிருப்பை கிராமங்களாக அமைப்பதே எமது நோக்கம்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

மலையக மக்களின் குடியிருப்பை கிராமங்களாக அமைப்பதே எமது நோக்கம்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

மலையக மக்களின் குடியிருப்பை கிராமங்களாக அமைப்பதே எமது நோக்கமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஒரு தோட்டத்தை எடுத்துக்கொண்டால் சகல வீடுகளும் உடைக்கப்பட்டு அவர்களுக்கான புதிய வீடுகள் அமைக்கப்படுவதோடு தோட்ட தொழிலாளர்கள் உட்பட ஏனைய தோட்டஉத்தியோகத்தர்களுக்கும் வீடுகள் வழங்க எத்தனித்தோம்.

இந்தியாவில் சோனியாகாந்தியை சந்தித்து இப்படியான ஒரு திட்டத்திற்கே 4000 வீடுகளை பெற்றோம். ஆனால் தற்போது புதிய கிராமங்கள் எனும் பெயர் அமைச்சு பலகையில் இருக்கின்றதே தவிர நடைமுறையில் அல்ல.

கட்சிக்கு ஆள் சேர்புக்கே வீடுகள் பயன்படுகின்றது. கோட்டாபாய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் இத்திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுமென இ.தொ.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!