சந்திரிக்கா ஒரு செல்லாக்காசு – அட்டனில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு

சந்திரிக்கா ஒரு செல்லாக்காசு – அட்டனில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அட்டன் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனைத்து சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராகவே செயற்பட்டார்.

அவரின் தாய் சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, அவரது கணவரான விஜய குமாரதுங்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் டி.பி.இலங்கரத்ன ஆகியவர்களுடன் கட்சியில் இருந்து விலகி இலங்கை மக்கள் கட்சியினை உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திரிக்கா அம்மையார் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், அவரது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது சகோதரரான அனுர பண்டாரநாயக்க மற்றும் அவரது சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோரை எதிரியாக பார்த்தவர். சந்திரிக்கா அவர்கள் ஜனாதிபதியாக ஆகுவதற்கு முன்பாக அவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு எதிராகவே அன்று செயற்பட்டனர்.

அவரை ஆதரித்து கட்சிக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என பாடுபட்டவர்களில் நானும் மங்கள சமரவீரவும் அடங்குவர்.

இவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இணைத்து இவருக்கு பதவிகளை வழங்க வேண்டும் என நுவரெலியாவில் இரண்டு நாட்கள் சந்திப்புகளும் என்னால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு வருகை தர கோரிய முக்கிய உறுப்பினர்கள் கூட வருகை தராது. இவரை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் அத்துலத் முதலியின் மறைவை அடுத்து அத்தனகல பிரதேச அமைப்பாளராக சந்திரிக்காவை நியமனம் படுத்த நாம் திட்டமிட்டோம். அதன்பின்னர் தென் மாகாண சபை தேர்தலுக்கு இவரை முன்னிலைப்படுத்தி இவரை வெற்றியீட்ட வைத்தோம். பின் படிப்படியாக அவரை முன்னேற்றி ஜனாதிபதியாகவும் ஆக்கினோம்.

ஆனால் இவரை கட்சிக்குள் இணைத்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அவரின் வாக்கு பெட்டியில் அவருக்கு ஆதரவாக 11 வாக்குகளே இருந்தது.

இவ்வாறாக அணைவராலும் வெறுக்கப்பட்ட சந்திரிக்கா ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது ஒரு பெரிய விடயமாக கருத முடியாது. அவரை கணக்கில் எடுக்கவும் போவதில்லை. காரணம்

அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட மாற்று கட்சியினருக்கு இவர் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளார் என தெரிவித்த எஸ்.பீ.திசாநாயக்க இம்முறை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச அதிகபடியான வாக்குகளால் வெற்றியீட்டுவார்.

ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்காக இ.தொ.கா ஊடாக பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளமை எமக்கு தெரியும். அதேநேரத்தில் அமைச்சர் திகாம்பரம் மலையக மக்களுக்கு எதை கொண்டு வந்து திணித்துள்ளார் என்பது எமக்கு தெரியும்.

அந்தவகையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து சென்ற இ.தொ.காவை விட மலையகத்திற்கு குடு, கேரளா கஞ்சா என கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார் என்றும் இம்மக்களுக்கு தெரியும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் பொது பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்ற வாக்குகளுடன் கூட்டும் பொழுது ஐக்கிய தேசிய கட்சியை விட இரண்டு மடங்குகளான வாக்குகளை பெற்றுள்ளது. ஆகையால் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இ.தொ.கா ஆகியோர் பெறும் வாக்குகளுடன் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

 228 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan