முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஹிட்லர் ஆட்சியா வேண்டும்? மக்களே தீர்மானிக்கட்டும்! இராகலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

ஹிட்லர் ஆட்சியா வேண்டும்? மக்களே தீர்மானிக்கட்டும்! இராகலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க போவது ஜனநாயகத்தை கடைபிடிக்கின்ற தலைவரயா அல்லது ஹிட்லர் போன்ற ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இராகலை பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் உறையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் நாங்கள் மக்களிடம் வந்தது எமது வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு கோரியே நான் மக்களை நாடி வந்துள்ளேன் எவரையும் நான் விமர்சிப்பதற்காக வரவில்லை.

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெருகின்ற தேர்தலானது இந்த நாட்டின் தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் தேர்தலாகும் மக்கள் தெரிவு செய்யும் தலைவர் ஜனநாயக நீரோட்டத்தை கொண்டவராக இருக்க வேண்டும். அவர் எமது வேட்பாளர் சஜித் பிரேமேதாச அவர்கள் நாம் எப்போது ஆராஜக அரசியல் நடத்தபோவது இல்லை மக்கள் அனைவருக்கும் தெரியும் கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறான அரசில் இடம் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுக்கின்ற எமது வேட்பாளர் சஜித் பிரேமேதாச அவர்களுடைய தந்தை ரனசிங்க பிரேமேதாச அவர்கள் எமக்கு பிரஜாவுரிமையை பெற்று கொடுத்ததை நாம் அனைவரும் மறந்துவிட கூடாது.
மலையகத்தில் உள்ள மாற்று கட்சி பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்வார்கள் நான் கட்சி மாறி சென்றுள்ளதாக மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் நான் எப்பொழுதும் சஜித் பிரேமேதாச அவர்களை விட்டு செல்லமாட்டேன் சஜித் வெற்றி பெற்ற பிறகு எனக்கு சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். அதனை கட்டாயம் நிறைவேற்றுவார்.

தோட்டதொழிலாளர்களுக்கு இம்மாதம் நாங்கள் பெற்று கொடுப்பதாக கூறப்பட்ட ஜந்தாயிரம் ரூபா கொடுப்பனவு அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் ஆகையால் மக்கள் எவரும் அச்சமடைய தேவையில்லை. நான் எமது மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் அதனை இடை நிறுத்த பல முறையில் முயற்சி செய்து வருகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு அது முடியாமல் போய்விடுகிறது.

இந்த அரசாங்கத்தின் ஊடாக நான் அமைச்சர்களான மனோகனேசன் இராதகிருஸ்னண் ஆகியோரும் இனைந்து மக்களை அபிலாசைகளை நிறைவேற்றி வருகிறோம். ஆனால் மலையகத்தில் செளமியமூர்த்தி தொண்டமான் இருந்த காலபகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வந்தது அதற்கு பிறகு மலையகத்தில் எதுவுமே இடம்பெறவில்லை என்றார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle