முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாற வேண்டும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாற வேண்டும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க எடுத்த முடிவினை நாங்கள் வரவேட்கிறோம்.

இந்த அறிக்கை முழு இலங்கைக்குமே ஒரு மாறுதலை ஏற்படுத்த கூடிய சூழலினை உருவாக்கும். அவர்களின் வருகையின் மூலம் சஜித் பிரேமதாசவின் வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டள்ளது என்பது எவராலும் மறுக்க முடியாது.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பேசபப்ட்ட போதெல்லாம் அவற்றிக்கு எதிராக பல முட்டகட்டைகள் போடப்பட்டன. எனவே இவர்கள் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாறி இனப்பிரச்சினை தீர்விக்கும் அதேவேளை அபிவிருத்திக்கும் அலுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம்.எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா கோட்லோஜ் பகுதியில்; இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மலையக பகுதியில் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் அதிகமான இளைஞர் யுவதிகளை காணக்கூடியதாக இருக்கின்றது.இது சஜித் பிரேமதாச கூட்டம் என்பதனாலேயே இவ்வாறு இவர்கள் வருகை தருகின்றனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற நபர்களிலே மிகவும் வயது குறைந்தவர்கள் என்பதனால் இளைஞர்களுடைய வேகத்தினை புரிந்து கொண்டு இளைஞர்களின் நன்மை கருதி பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் அண்மையிலே சொல்லி இருந்தார்.

அதே நேரத்தில் மகளிர்களுக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். எனவே இளைஞர்கள் அலைஅலையாக வருகை தந்து அவரின் வெற்றிபெறச் அவர்களின் வாழ்க்கையினையும் வலுவடையச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன. என அவர் மேலும் தெரிவிததார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle