முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உரிமைகளுக்காக எவரிடமும் கையேந்த கூடாது! ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உரிமைகளுக்காக எவரிடமும் கையேந்த கூடாது! ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கம்

மலையக பெருந்தோட்ட மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எவரிடமும் சென்று கையேந்த கூடாது அவர்களின் உரிமைகளை மக்கள் பிரதிநிதிகள் பெற்று கொடுக்க முன்வர வேண்டும் மென ஜனாதிபதி வேட்பாளர் எம். கை. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ஒன்று கூறுகிறார் சஜித் பிரேமேதாச வேறொன்று கூறுகிறார்.

தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் கல்வி மருத்துவம் போன்ற விடயங்களில் இந்திய நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தபட வேண்டும் மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஸ்தாபக தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான் எனக்கு நல்ல பரிட்சையமானவர். வடகிழக்கில் கடந்த மூப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்ததின் காரணமாக அங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வந்தார்கள். ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து பிறகு அங்குள்ள மாணவர்கள் கல்விதுறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். மலையகத்தில் கல்வியின் வளர்ச்சியில் முன்னேற்ற தன்மை குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது. அதற்கு மலையக பிரதிநிதிகள் கவனம் செலுத்தபட வேண்டும்.

மலையகத்தில் வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளபட்டு வந்தாலும் முலுமையான அபிவிருத்திகள் எதுவுமே மலையக மக்களுக்கு கிடைக்கபெறவில்லை. இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு மாத்திரம் பிரச்சினை இருக்கு என்று நாம் கூற முடியாது. எமது நாட்டில் வாழுகின்ற அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதற்கு நாம் ஒரு தீர்வினை காணப்பட வேண்டும். முதியோர்களுக்கு சமுர்தி
கொடுப்பணவு வழங்கபடுகிறது. அதில் முவ்வாயிரம் தொடக்கம் ஜந்தாயிரம் ருபா போன்ற தொகைகளை வழங்கபடுகிறது. இந்த தொகை அவர்களுக்கு போதுமானது அல்ல சமுர்தி கொடுப்பனவை பெரும் ஒரு முதியோருக்கு குறைந்தபட்சம் 30ஆயிரம் ருபா வழங்கபட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த நாட்டில் நூற்றுக்கு ஏழுபத்தி ஜந்து சதவீதம் சிங்கள மக்கள் வாழுகின்றர் அதில் வெறுமனே இருபத்தி ஜந்து சதவீதம் மாத்திரம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர் அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு உரிய முறையில் கிடைப்பதில்லை. முதியோர்கள் பேருந்திலோ அல்லது புகையிரத வண்டியிலே பயணம் செல்லுகின்ற போது அவர்களுக்கான இலவச அனுமதி சீட்டுகள் வழங்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் .

இலங்கை நாட்டுக்கு கல்வி திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் D.W..கன்னங்கரா அவர்கள் இது போன்ற ஒரு வாய்ப்பு இந்தியா நாட்டுக்கு கூட கிடைக்கவில்லை எனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபானத்தில் சுயட்சி பிராந்தியம் ஒன்றை அமைக்க பட வேண்டுமென நான் வெளியிட்டுள்ளேன். மத்திய மாகாணம், ஊவா மாகாணம். சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்கள் சுமார் 35 சதவீத தமிழ் மக்கள் வாழுகின்றார்கள். இந்த மக்களுக்கு சமமான பிரஜைகள் தெரிவு செய்யபட வேண்டும்.

மலையக பகுதியை மாத்திரம் மல்ல நாட்டில் உள்ள வைத்தியதுறைகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. ஆகையால் தான் இன்று மருத்துவத்திற்காக கோட்டாபாய ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் சிங்கபூர் சென்று சிகிச்சை பெருகிறார்கள். ஆனால் மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உரியமுறையில் வைத்துதுறை இயங்குவதில்லை என்றார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle