முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > தீபாவளி முற்பணத்தை இ.தொ.கா தடுக்கவில்லை! ஆதாரத்தை நிரூபித்தார் ஆறுமுகன் தொண்டமான்

தீபாவளி முற்பணத்தை இ.தொ.கா தடுக்கவில்லை! ஆதாரத்தை நிரூபித்தார் ஆறுமுகன் தொண்டமான்

மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் மேலதிகமாக 5000 ரூபாய் வழங்குவதாக கூறியதை இ.தொ.கா தடுக்கவில்லை இது பொய் குற்றச்சாட்டு என இ.தொ.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கந்தப்பளை பிரதேசத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து நடாத்திய தேர்தல் பிரச்சாரத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றிய ஆறுமுகன் தொண்டமான் ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க தலவாக்கலையில் 1000 ரூபாய் தருவதாக கூறினார். கிடைக்கவில்லை. 50 ரூபா மலையக மக்களுக்கு தருவதாக கூறினார். அதுவும் பொய்யாகிவிட்டது.

தற்போது தீபாவளி முற்பணத்தை இ.தொ.கா தடுத்ததாக கூறுகின்றனர் ஆனால் அவ்விடயத்திலும் மூக்கடைப்பட்டுள்ளனர் எனவும் இ.தொ.கா தீபாவளி முற்பணத்தை தடுக்கவில்லை என்பதற்கும் ஆதாரத்தை காண்பித்தார்.

இதன்போது கந்தப்பளை நகர தலைவர் வேலு யோகராஜ்,கந்தப்பளை நகர வர்த்தகர்கள்,பிரதேச மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்..

Leave a Reply

error: Content is protected !!