முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > தீபாவளியை முன்னிட்டு மெததும்பர நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

தீபாவளியை முன்னிட்டு மெததும்பர நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

கண்டி மாவட்டத்தில் மெததும்பர பிரதேசத்திற்குட்பட்ட கோமரை துனிஸ்கலையில் கடந்த தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி 26, 10 ,2019 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

தோட்ட முகாமையாளர் மற்றும், ரங்களை பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மற்றும் சமூக ஆர்வலர்களான புஷ்பநாதன், சமூக ராஜ், என்டன், குகன் ஸ்டீவ் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று சிறுவர்களின் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வோடு இப்போட்டி இனிதே ஆரம்பமானது.

இந்த போட்டி நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள், மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.

இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மாத்தளை சூப்பர் லைன்ஸ் அணியினர் 10,000 ரூபாய் பண பரிசினையும் வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது சூரியன்ஸ் அணியினர் 30000/= ஆயிரம் ரூபாய் பணம் பரிசினையும் வெற்றி கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை இந்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அக்னி (பிளிமத்தளாவ) அணியினர் 50000/=ஆயிரம் ரூபாய் பணபரிசினையும் வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.

இந்த தொடரின் விருதுகள் பெற்றுக்கொண்ட விபரங்கள் பின்வருமாறு.

ஆட்டநாயகன் விருது-தினேத் சசித்ர (அக்னி) தொடர் ஆட்டநாயகன் விருது – அஜித் பன்டார (அக்னி) சிறந்த பந்துவீச்சாளர் ரோஷான் (சூரியன்ஸ்) அணி சிறந்த துடுப்பாட்ட வீரர் – குசல் (மாத்தளை) சிறந்த அணித்தலைவர் காண விருது -ராஜ்குமார் (கோமரை) மறைந்த சிரிகாந்த் ஞாபகார்த்த விருது- சஜீவன்( n.t.g) சிறந்த ஒழுக்கமான அணி- ராகுல் விளையாட்டுக் கழகம்

வின்னிஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டி 2019 இல் கலந்து சிறப்பித்த அனைத்து அணிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு எங்களோடு அனுசரணையாளராக கைகோர்த்து தொடர்ந்தும் இருந்த அனுசரனையாளர்களுக்கும் துனிஸ்கலை வின்ஸ்டார் விளையாட்டு கழகம் சார்பாகவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் சிவராமகிருஷ்ணன் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்.பாலேந்திரன்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle