முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஆராஜக அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்ககூடாது! அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

ஆராஜக அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்ககூடாது! அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் ஆராஜாக அரசியலுக்கு ஒரு போதும் நாட்டுமக்கள் இடமளிக்க கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்..

இன்று சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மஸ்கெலியா பிரதேசசபையின் உறுப்பினர் எஸ். சுரேஸ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உட்பட அமைச்சின் பிரத்தியோக செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம், இம்முறை இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் வெள்ளை வேன் கலாசாரம் உருவாகிவிடும்.

சஜித் பிரேமேதாச வெற்றி பெற்றால் எதிர்கால இளைஞர் யுவதிகளுக்கும் வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ள காணிகளை பெற்று கொள்ள முடியும். நான் இன்று தோட்டவாரியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது எந்த தரப்பினரையும் நான் விமர்சிப்பதில்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் ஆகவே நாம் ஜனநாயக ரீதியாக ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய கடைப்பாடு இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது.

நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படுகின்றமையால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எனவே இது தான் ஜனநாயகம் அன்று ரனசிங்க பிரேமேதாச அவர்கள் பிரஜாஉரிமை பெற்று கொடுத்ததன் காரனமாகத்தான் மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். சஜித் பிரேமேதாச வெற்றிபெற்றால் மாத்திரமே தனிவீட்டு திட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லாம். இல்லாவிட்டால் மாற்று கட்சியினர் தேர்தல்
விஞ்ஞாபானத்தில் குறிப்பிட்டுள்ளனர் மாடி வீடுதான் அமைக்கமுடியுமென ஆகையால் கோட்டாபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றால் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கபடுகின்ற இந்திய வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபட முடியாத ஒரு சூழ்நிலை காணப்படும்.

இந்த நாட்டில் நிம்மதியான முறையில் மக்கள் வாழ வேண்டும் என்றால் கட்டாயம் சஜித் பிரேமேதாச அவர்களுக்கு எதிர்வரும் 16ம் திகதி வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களித்தால் மாத்திரமே மலையகத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle