முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > 40 வருட பிரஜா உரிமைப் போராட்டத்தை சஜீத்தின் தேர்தல் வெற்றிக்காக அடகுவைக்க வேண்டாம்! திலகராஜிக்கு கனகராஜ் பதில்

40 வருட பிரஜா உரிமைப் போராட்டத்தை சஜீத்தின் தேர்தல் வெற்றிக்காக அடகுவைக்க வேண்டாம்! திலகராஜிக்கு கனகராஜ் பதில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 40 வருடங்களாக கடுமையான சுதந்திரப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்த மலையக மக்களின் பிரஜாவுரிமையை சஜித் பிரேமதாசவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வரலாறுகளை தேவைக்கேற்ப திரிபுபடுத்தி வாக்கு சேகரிக்கும் கைங்கரியத்தை தற்போது உபாயமாக பாவித்து வருகின்றனர். இதற்காக முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் மூலமாக மக்களுக்கு உழைத்த மூதாதையர்களை நாம் மதிக்கிறோம். அவர்களை தேர்தலுக்காக கொண்டுவந்து முறையான வரலாற்று பதிவுகளை மேற்கொள்ள முயற்சிப்பது துரதிஷ்டவசமானது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றனர் கடந்த நான்கு வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமாக மக்களுக்கு செய்த சேவைகளை சொல்லி வாக்கு கேட்கலாம். அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளர்களை கொண்டு எதிர்கால மலையக சமூகத்திற்கு என்ன விடயங்களை சாதிக்க போகின்றார்கள் என்பதை பட்டியல் படுத்தலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து கடந்த காலத்திலே எமக்கு இந்த நாடு கொடுத்த நாடற்றவன் நாதியற்றவன் கள்ளத்தோணி என்ற பட்டத்துக்கு எல்லாம் முற்று புள்ளி வைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் சாதனைகளை கொச்சைப்படுத்துவது சரியானதுதானா என்பதை குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய மனசாட்சியை தொட்டு ஒரு முறை கேட்டுக்கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல் எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட இருந்தது.ரத்தம் சிந்தாமல் அகிம்சை வழியில் இராஜதந்திர முறையில் இந்த பிரச்சனையை அணுகி மிக நீண்டகால அதாவது 40 வருட காலத்துக்குப் பின் மீட்டெடுத்த உரிமையை சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் வாக்குக்காக நமது இனத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமான சுயநலம் ஆகும்.

பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களின் அரசியலை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு அவரின் இலக்கியத்தில் பெருமதிப்பு வைத்திருப்பவர் நான். பணத்துக்காக பரி போகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீட்பதற்காக
பாராளுமன்ற கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து உரிமையை நிலை நாட்டியவர் கனகராஜ் என்று ஒரு காலத்திலே திலகராஜ் வடித்த கவிதை என்பது இன்னும் என் கண்முன்னால் நிற்கிறது. ஆனால் அதே திலகராஜ் அவர்கள் இன்று அரசியலுக்காக பாராளுமன்றத்துக்கு பின் கதவு வழியாக சென்றவர் என விமர்சிப்பது வரலாறுகள் எப்படியும் விரிவுபடுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

தற்போது நடைபெறுகின்றது ஒரு ஜனாதிபதி தேர்தல் ஆகும் இந்தத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கின்ற வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எம்மோடு செய்து கொண்ட புரிந்துணர்வு அடிப்படையில் எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தில் மலையகத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்படுகின்றோம் கடந்த நான்கரை வருடங்களில் எமது சமூகம் பல்வேறு இழப்புக்களை சந்தித்து இருக்கிறது ஏனைய சமூகங்களுக்கு
வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு மலையக இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை வேலைவாய்ப்புக்களை புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றோம் அரச நிதி ஒதுக்கீட்டில் மலையகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது தோட்டத் தொழிலாளர்களின் அனுபவித்த இன்னல்களுக்கு எல்லையே இல்லை என்ற நிலைமை காணப்படுகிறது இவற்றையெல்லாம் சரி செய்து எமது சமூகத்தை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றது வரலாறுகளை தெளிவுபடுத்தும் அதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் முன்னணியில் இருந்து சேட்பட்டவர்களை பயன்படுத்திக் கொள்வதும் பொருத்தமற்ற செயலாக கருதுகிறோம் எனவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle