முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டிற்கு குவிந்த மலையக இளைஞர்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டிற்கு குவிந்த மலையக இளைஞர்கள்

சிறிலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இளைஞர் மாநாடு ஒன்று நேற்று வட்டவலை ரொசால்லை பேன்குயின்ஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த இளைஞர் மாநாடு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது இந்த மாநாட்டிற்கு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் நிதிச்செயலாளரும் முன்னால் மத்திய மாகாண அமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் அனுசியா சிவராஜா, கட்சியின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி. சக்திவேல் மற்றும் பெருந்திரளான இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்கு வருகை தந்திருந்த மலையக இளைஞர் யுவதிகளால் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேள்வி எழுப்பபட்டது. இளைஞர் யுவதிகளால் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய ஆறுமுகன் தொண்டமான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றி பெற்ற உடன் மலையக இளைஞர் யுவதிகளால் முன்வைக்கபட்ட சமுகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கபடும் என்றார்.

இந்த கேல்வி பதில் மாநாடு சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றதோடு வீடமைப்பு, தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி தொடர்பாக கலந்து ஆராயபட்டதோடு எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் மேற்கொள்ளபடவிருக்கின்ற தனி வீட்டுத்திட்டம் தொடர்பிலும் இளைஞர்யுவதிகளுக்கு காகொளியூடாக விளக்கமளிக்கபட்டது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle