முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை தோட்டதொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமாயின் ஒத்துழைப்பு! ஆறுமுகன் தொண்டமான்

கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை தோட்டதொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமாயின் ஒத்துழைப்பு! ஆறுமுகன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடுவதாக கூறப்பட்ட ஜம்பது ரூபா கொடுப்பனவானது கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை ஜம்பது ரூபா கொடுப்பனவு வழங்கபடுமாயின் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வட்டவலை ரொசல்லபகுதியில் இடம் பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜம்பது ரூபா வழங்கபடுவதாக கூறப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா கொடுப்பணவு வழங்கபட போவதாக கூறி இதற்கு ஆதரவு நல்குமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்சயலாளருக்கு கடிதம் ஒன்று
அனுப்பி வைக்கபட்டது. தொழிலாளர்களுக்கு ஓரிருமாதங்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பணவை வழங்கி மறு மாதம் இவர்கள் இதனை தொழிலாளர்களுக்கு வழங்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது ஆகையால் தான் நாங்கள் கூறுகிறோம் கூட்டு ஒப்பந்தம் முடியும் வரை இந்த கொடுப்பணவை வழங்க வேண்டும் என கோருகிறோம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எப்போதும் தொழிலாளர்களுக்கு துறோகம் இழைக்காது.

மலையகத்தில் இன்று அதிகமான இளைஞர்யுவதிகள் பல்வேறு துறைகளில் திறமையுடையவர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு ஏற்ற துறையை வளர்த்து கொள்ள நடவடிக்கைகள் ஏற்படுத்தி
கொடுக்கபடும் இன்று மலையகத்தில் அநேகமான படித்த இளைஞர் யுவதிகள் இருக்கிறார்கள். விளையாட்டு துறையில் திறமையானவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கான கழகம் அதேபால் தாதியர் பயிற்சி பெற பயிற்சி கல்லூரி
என்பன எமது வேட்பாளர் கோட்டாபய வெற்றிபெற்ற உடன் இது போன்ற அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளபடும். இதேவேளை மலையகத்தில் தாமரை மொட்டு மலர அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டு கொண்டார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!