முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > தோட்டத்தொழிலாளர்களை புலிகள் என்று அழைத்தவர் மஹிந்த ராஜபக்ஸ! தலவாக்கலையில் பிரதமர் தெரிவிப்பு

தோட்டத்தொழிலாளர்களை புலிகள் என்று அழைத்தவர் மஹிந்த ராஜபக்ஸ! தலவாக்கலையில் பிரதமர் தெரிவிப்பு

மலையகத்தில் வாழுகின்ற மக்கள் இன்று மிக முக்கிய இடமொன்று வழங்கப்பட்டுள்ளது இந்த நாட்டின் பிரஜைகளாக அவர்களை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் அவர்களை விடுதலை புலிகளாகவே பார்த்தனர். அது மட்டுமல்ல நகரங்களிலிருந்து வெளியேறி விடவில்லை. கொழும்புக்கு வர விட வில்லை. தொழில் புரிய விடவில்லை சிலர் மாயமானார்கள், இன்னும் சிலர் வெள்ளை வேனில் கொண்டு சென்றார்கள். இன்று அவை ஒன்றுமில்லை எவரும் காணாமல் போவதுமில்லை. கொழும்புக்கு சென்று வேலை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளன. வெள்ளை இல்லை அதற்கு பதிலாக சுவசரிய வேன் மாத்திரமே உள்ளது என்று கூற விரும்புகிறேன். என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்;.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று (10.11.2019) அன்று தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்று அமைச்சர் திகாம்பரம் அவர்கள் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்தியுள்ளார்.நீங்கள் தோட்டத்தொழிலார்கள் அல்ல மலையகத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் என்ற நாமத்தினை ஏற்படுத்தியுள்ளார்.முன்பெல்லாமம் தோட்டம் தோட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் நீங்கள் தோட்ட பிரஜைகள் அல்ல நீங்கள் இலங்கை பிரஜைகள் நீங்கள் நாட்டில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.நாம் அனைவரும் இலங்கையர்கள் என கூற விரும்புகிறேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது கல்வித்துறையினையும் சுகாதார துறையினை பொறுபேற்றேன் நான் பிரதமராக ஆனவுடன் மலையக மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க ஆரம்பித்தேன.; இன்று ஏழு பேச்சஸ் காணியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.

இது வரை சுமார் 5000 ஒப்பனைகள் வழங்கப்பட்டுள்ளன.நாங்கள் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம்இதேவையான பணம் தருபவர் இந்திய பிரதமர் மோடி என்று கூற விரும்புகிறேன்.

இன்று உங்களுக்கும் ஒரு காணியிருக்கிறது எனக்கும் காணியிருக்கிறது நாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இதை விட வேகமாக நாம் முன்னேற்றம் அடைவோம.; கடந்த காலங்களில் அமைச்சர் ராதாகிருஸணன் தலைமையில் கணிதம், விஞ்ஞானம் படிக்கக்கூடிய 25 பாடசாலைகளை மலையகப்பகுதியில் உருவாக்கினோம்.நானு ஓhயவில் தேசிய பாடசாலை ஒன்றினை உருவாக்கியுள்ளோம். இப்போது தோட்டத்தொழிலாயர்கின் பிள்ளைகள்; இன்று பொலிஸ் பதவியில் உள்ளார்கள்இஅரச சேவையில் உள்ளார்கள் இன்று முஸ்லிம் சிங்கள மக்களை போல் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்தியிருக்கிறேன்.

கோட்டபாய ராஜபக்ஸ இந்த பகுதிக்கு என்ன செய்யப்போகிறார.; என்று கூற விரும்புகிறேன்.மலையக மக்கள் என்று சொல் முடிவில்லை அவர் தோட்ட மக்கள் என்றே சுட்க்காட்டியிருக்கிறார். அது மாத்திரமன்றி மலையக பகுதிகளில் மல்லிகை பூவினை உற்பத்தி செய்து அந்நியச்செலவாணியினை பெற்றுத்தர போவதாக தெரிவித்துள்ளார்கள.; இது மாத்திரமன்று நாங்கள் உருவாக்கிய கணித விஞ்ஞான பாடசாலைகளை மீண்டும் உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள். எமது நோக்கம் தொழில் துறையினை ஊக்குவித்து நவீக தொழிநுற்ப கல்வி விருத்தி செய்து இந்த மலையக பகுதிகளில் அதிகமான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே எனவே இதனை செய்வதற்கு நீங்கள் அன்னத்தின் முன் புள்ளடி இட்டு சஜித் பிரேமதாச அவர்களை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!