சிறந்த நகைச்சுவை நடிகராக சிங்கள சினிமாவுக்குள் நுழைவார் கோட்டா! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு

சிறந்த நகைச்சுவை நடிகராக சிங்கள சினிமாவுக்குள் நுழைவார் கோட்டா! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு

“ நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சஜித்துக்கான வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் எதிரணியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தாமரை மொட்டு கருகி காணாமல்போவது உறுதி.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலும் – கண்டி மாவட்டத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் நோக்கிலும் -வேலுகுமார் எம்.பி. சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இன்று ( 11.11.2019) மூன்றாவது நாளாகவும் ‘Operation Victory SP’ எனும் பிரசார வியூகம் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது,

“கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் .அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து வெற்றிநடை போடலாம் என்றே ராஜபக்சக்களும் அவர்களின் முகாமை சேர்ந்தோரும் திட்டம் போட்டனர்.

ஆனால் உண்மை என்னவென்பதை மக்களுக்கு நாம் தெளிவுப்படுத்தி விட்டதுடன், கூட்டு எதிரணியின் சூழ்ச்சி அரசியலையும் உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவிட்டோம். இதனால் என்னசெய்வதென்று புரியாமல், ஏன்டா அரசியலுக்கு வந்தோம் என கோட்டாபய ராஜபக்ச விழிபிதுங்கி நிற்கிறார்.

அதுமட்டுமல்ல நாடு பூராகவும் சஜித் ஆதரவு அலை உருவாகியுள்ளதால், கோட்டாவின் முகத்தில் சோகம் குடிகொண்டுள்ளதை தற்போதே காணக்கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவரிடம் இருந்த அந்த வேகம் தற்போது இல்லை. ஹீரோபோல் நுழைந்தவரை இன்று ‘கோமாளி’ கிங் ஆக்கிவிட்டனர்.

“கொய்த யன்னே என கேட்டால் மல்லே பொல்” எங்கே போகின்றீர்கள் என கேட்டால், பையில் தேங்காய்) என எதுவும் புரியாமல், தெளிவில்லாமல் வாயில் வருவதை வார்த்தையாக தெரிவிக்கும் வகையிலேயே கோட்டாவின் உரைகள் அமைந்துள்ளன.

விவசாயம் தொடர்பில் கதைக்கையில், அதனுடன் மறைமுகமாகவேனும் தொடர்படாத காரணிகளை பட்டியலிடுகின்றார். சிங்கள சினிமாத்துறைக்கு நமது வைகைப்புயல் வடிவேலுபோன்ற போன்ற நகைச்சுவை கலைஞர் ஒருவர் இல்லையென இவ்வளவு நாளாக கவலைபட்டிருந்தோம். அந்த கவலையை கோட்டாபய ராஜபக்ச தீர்த்துவைத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளோம்.

குறிப்பாக நாங்கள் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் கோட்டாவின் உரையை கேட்டால் வாய்விட்டு சிரித்து, உற்காசமாக போகக்கூடியதாக இருக்கின்றது. மறுபுறத்தில் ‘சீரியஸாகவே பேசுவதுபோல் எண்ணி’ விமல் .கம்மன்பில போன்றோர் சிரிப்பு காட்டிவருகின்றனர்.

எனவே, சிங்கள மக்களும் இன்று தெளிவாக உள்ளனர். இதன்காரணமாகவே எங்கு சென்றாலும் சஜித், சஜித் என்ற நாமம் உச்சரிக்கப்படுவதை கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

மொட்டு மலரும் என வழிமீது விழிவைத்து காத்திருப்பவர்களுக்கு தேர்தல் முடிவுகள் பெரும் சோகமாகவே அமையும் என்பதால் முன்கூட்டியே அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் .16 ஆம் திகதி மக்கள் வழங்கும் ஆணையால் மொட்டு கருகி காணாமல்போய்விடும். எனவே, அழிவுக்காக வாக்களிக்காமல் ஆக்கத்துக்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எ ன்றார்.

 176 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!