முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > எஸ். பி. யின் உத்தியோகத்தர்கள் இருவர்களுக்கு மீண்டும் 25ம் திகதி வரை விளக்கமறில்

எஸ். பி. யின் உத்தியோகத்தர்கள் இருவர்களுக்கு மீண்டும் 25ம் திகதி வரை விளக்கமறில்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க வின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவரும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ஸ்டொக்ஸி உத்தரவிட்டுள்ளார்.

இன்று இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்த பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது

கடந்த வாரம் கினிகத்தேன பொல்பிட்டி கம பிரதேசத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க வுடைய வாகனத்தை வழி மறித்த இருவர் மீது தூற்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றசாட்டு தொடர்பில் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யபட்டனர்.

கடந்த வாரம் அட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டு கொழும்பு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேலை இந்த தூற்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளபட்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!